உள்ளாடைக்குள் இருந்த ரகசிய உள் பாக்கெட்.. ரவுண்டு கட்டிய அதிகாரிகள்.. பரபரப்பான விமான நிலையம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமங்களூரு விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து உள்ளாடைக்குள் வைத்து தங்கம் கடத்தி வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | உலகின் மிகவும் காரமான மிளகாய்.. மனுஷன் அதேயே அசால்ட் செஞ்சிருக்காரே.. கின்னஸ் அதிகாரிகளே ஷாக் ஆகிட்டாங்க.. !
கடத்தல்
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு கரன்சிகளுடன் இந்தியா வரும் நபர்களை இந்திய விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து கைது செய்து வருகின்றனர். பணத்திற்காக இளைஞர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக காவல்துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தொழில்நுட்ப உதவியோடு அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். இதன்மூலமாக கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டாலும், கடத்தல் முயற்சிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மங்களூரு விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர் சட்ட விரோதமாக தங்கம் கடத்தி வந்ததாக சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பயணி
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலமாக மங்களூரு விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார் இளைஞர் ஒருவர். அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே, அவரை தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அவர் தடுமாற்றமாக இருப்பதை அறிந்த அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்திருக்கிறார்கள். அதன் பலனாக அவரது உள்ளாடைக்குள் ரகசியமாக ஒரு பாக்கெட் இருப்பதையும் அதனுள் தங்க பேஸ்ட் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.
இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் எடை 831 கிராம் இருந்ததாகவும், அதன் சந்தை மதிப்பு 43.29 லட்ச ரூபாய் எனவும் மங்களூரு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இந்நிலையில், துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்த அந்த நபரை அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். இதனால் மங்களூரு விமான நிலையமே பரபரப்புடன் காணப்பட்டது.
மற்ற செய்திகள்