'கொஞ்சம் நிம்மதியை கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாக தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். இதன் காரணமாகப் பலரும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்வதற்குப் பதிலாகத் தங்கத்தில் தங்களது முதலீடுகளைச் செய்யத் தொடங்கினார்கள். பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்ததால் தங்கத்தின் தேவை அதிகரித்தது.

'கொஞ்சம் நிம்மதியை கொடுத்த தங்க விலை'... இன்றைய நிலவரம் என்ன?

இதனால் தங்கத்தின் விலை என்பது கணிசமாக அதிகரித்துக் கொண்டே சென்றது. தற்போது கொரோனா சூழலிலிருந்து பலரும் மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தங்க விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4627 -க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37016 -க்கு விற்பனையாகிறது.

இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 40056 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து 67.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற செய்திகள்