பரபரவென இயங்கிய விமான நிலையம்.. "அங்க இருந்த குப்பை தொட்டி'ல கைவிட்டு பாத்தப்போ.." மிரண்டு போன அதிகாரிகள்
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் பரிசோதித்து பார்த்த போது அதில் கிடந்த பொருள், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Also Read | பாம்புக் கடி மூலம் உயிரிழந்த அண்ணன்.. இறுதிச் சடங்கிற்கு வந்த சகோதரனுக்கும் காத்திருந்த துயரம்
டெல்லி, சென்னை உள்ளிட்ட இந்திய விமானங்களில், அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் போது, ஏதாவது பரபரப்பான பொருட்கள், அங்கே வரும் பயணிகளிடம் இருந்து கிடைப்பது, அதிகாரிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணும்.
கடந்த சில மாதங்களாகவே, இந்திய விமான நிலையங்களில், அதிகாரிகள் சோதனையின் போது, சட்ட விரோதமான பொருட்கள் சிக்குவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
அந்த வகையில், தற்போது உத்தர பிரதேச மாநிலம், லக்னோ விமான நிலையத்தில் அதே போல ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. அதன் படி, லக்னோ சரண் சிங் விமான நிலையத்தில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில், தங்க கட்டிகள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு சென்று சோதனை மேற்கொண்ட சுங்கத் துறை அதிகாரிகள், குப்பைத் தொட்டிக்குள் இருந்து மொத்தம் ஆறு தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும், இந்த தங்க கட்டிகளின் மதிப்பு, சுமாரா 36 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றது.
கருப்பு டேப் ஒன்றின் மூலம் சுற்றப்பட்ட தங்கக் கட்டிகள், பாலிதீன் கவர்களில் வைத்து, பின்னர் குப்பைத் தொட்டிகளில் வீசப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக விமான நிலையத்திற்கு தங்க கட்டிகளை கொண்டு வந்த நபர்கள், குப்பைத் தொட்டியில் வீசி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, சிசிடிவி காட்சிகள் மூலம், அப்படி வீசிச் சென்ற நபர் யார் என்பதையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
லக்னோ விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் இருந்து பல லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது.
மற்ற செய்திகள்