‘இங்க இருந்து எப்டி போறது’..? ‘நடுவானில் வழி தெரியாமல்’.. ‘குழம்பிய விமானி செய்த காரியம்..’
முகப்பு > செய்திகள் > இந்தியாகோ ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பயணத் திசைக்கான விளக்கப்படம் இல்லாமலேயே பாங்காங் புறப்பட்டுள்ளது.

கோ ஏர் நிறுவனத்தின் A320neo ரக விமானம் டெல்லியில் இருந்து 146 பயணிகளுடன் நேற்று தாய்லாந்து புறப்பட்டுள்ளது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோதுதான் பயணத் திசைக்கான விளக்கப்படம் கொடுக்கப்படாதது விமானிகளுக்கு தெரிய வந்துள்ளது.
எந்த திசையில் பயணிக்க வேண்டும், விமான நிலையத்தை எவ்வாறு அணுக வேண்டும் ஆகிய விவரங்களைக் கொண்ட விளக்கப்படம் இல்லாமல் பயணிப்பது ஆபத்து என உணர்ந்த விமானிகள் உடனடியாக விமானத்தை டெல்லிக்கு திருப்பியுள்ளனர். பின்னர் அங்கு விளக்கப்படத்தைப் பெற்றுக்கொண்டு விமானம் மீண்டும் பாங்காங் புறப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக பாங்காங் செல்லும் விமானத்திற்கு பதிலாக சம்பவத்தன்று புதிய விமானம் இயக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே விமானத்தில் பயணத் திசைக்கான விளக்கப்படம் இடம்பெறவில்லை என நிறுவனத்தின் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.