'இனிமேல் எந்த பெர்மிசனும் தேவையில்லை...' 'ஜாலியா கோவா போலாம்...' - ஆனால் ஒண்ணு மட்டும் ரொம்ப முக்கியம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா ஊரடங்கு காரணமாக கோவா செல்லும் திட்டமிட்ட சுற்றுலா பயணிகள் அனைவரும் பயண அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் மாவட்டம் மற்றும் மாநிலங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்வோர் பயண அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள புதிய சுகாதார நெறிமுறைகளின்படி கோவா அரசு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கோவா செல்வோர் பயண அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கட்டாயமாக கோவாவிற்குள் நுழைவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
அதோடு கோவா மாநிலத்திற்குள் நுழையும் போது கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இவ்விதிமுறையை கடைபிடிக்காதோருக்கு ரூ.2000 கட்டணத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்படுவார்கள் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்