Goa IFFI 2022 : “அதிர்ச்சியா இருக்கு..” கோவா திரைப்பட விழாவில் 'காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தை கடுமையாக விமர்சித்த ஜூரி நாடவ் லேபிட்
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவா தலைநகர் பனாஜியில் 53வது இந்திய சர்வதேச திரைப்படத்திற்கான லோகோவை முன்னதாக அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டு தொடங்கி வைத்தார்.
மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் சார்பில், கோவாவில் இந்த 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 79 நாடுகளைச் சேர்ந்த 280 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுவதாக முன்பே தெரிவிக்கப்பட்டது.
இதில்தான் விவேக் அக்னிஹோத்ரி இயக்ககிய, 'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் விமர்சனத்தை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் 11ம் தேதி வெளியான இப்படம் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி, பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இந்நிலையில், கோவா 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நிறைவு விழாவில் பிரபல இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) ஜூரியுமான நாடவ் லாபிட் இப்படம் திரையிட்டது குறித்த தனது அதிருப்தியை வெளியிட்டார்.
குறிப்பாக இவ்விழாவின் தலைவர்களுள் ஒருவராகவும் உள்ள நடவ் லாபிட், 'தி காஷ்மீர் பைல்ஸ்' படம் இந்த சர்வதேச திரைப்பட விழா போட்டிப் பிரிவில் அனுமதிக்கப்பதற்கு வருத்தம் தெரிவித்தார். ஆம் இந்த படம் இந்திய பனோரமா பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த நவம்பர் 22-ல் திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்துள்ள அனுபம் கேர் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட நிலையில், இப்படவிழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய நாடவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தால் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் பேசியவர், இதுபோன்ற மதிப்புமிக்க திரைப்பட விழாவின் கலைப்போட்டிப் பிரிவுக்கு, அப்படம் பொருத்தமற்றதாகவும், ஒரு பிரச்சார தன்மை கொண்ட படமாக இருப்பதாகவும் கூறியவர், “கோவாவில் நடைபெறும் இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா, உண்மையான விமர்சனத்தை ஏற்கும். எனவே என் உணர்வுகளை வெளிப்படையாகப் பகிர்கிறேன்” என்று தெரிவித்து பேசினார்.
மற்ற செய்திகள்