மொத்தமா 21 லட்சம் அபேஸ்.. "எல்லாத்தையும் பண்ணிட்டு டிவியில் திருடர்கள் எழுதிய வார்த்தை.." ஒரு வினோத சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வீட்டின் கதவை உடைத்து திருட்டு நடத்தப்பட்டுள்ள நிலையில், அங்கே உள்ள டிவியில், திருடர்கள் எழுதி வாய்த்த வாசகம் ஒன்று, மிகவும் வினோதமாக அமைந்துள்ளது.

மொத்தமா 21 லட்சம் அபேஸ்.. "எல்லாத்தையும் பண்ணிட்டு டிவியில் திருடர்கள் எழுதிய வார்த்தை.." ஒரு வினோத சம்பவம்

கோவா மாநிலம், மார்கோவ் என்னும் நகரில் வசித்து வருபவர் ஆசிப் செக். இவர் தனது உறவினர் ஒருவரின் வீட்டின் விஷேச நிகழ்ச்சிக்காக கடந்த இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, இரண்டு நாட்கள் நிகழ்ச்சியை முடித்து விட்டு, மீண்டும் வீடு திரும்பிய ஆசிப்பிற்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது.

மொத்தமா 21 லட்சம்..

வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து பதற்றம் அடைந்த ஆசிப், இது தொடர்பாக அப்பகுதியில் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். இது தொடர்பாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணையையும் மேற்கொண்டனர். அடையாளம் தெரியாத நபர்கள், ஆசிப் வீட்டின் கதவுகளை உடைத்து, அங்கிருந்த சுமார் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றையும் திருடர்கள் கொள்ளை அடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

டிவி மீது இருந்த வார்த்தை

இந்த திருட்டு சம்பவம் குறித்து, ஆசிப்பின் வீட்டில் போலீசாருக்கு ஏதாவது தடயங்கள் கிடைக்குமா என்றும் காவல் துறையினர் தேடியுள்ளனர். அப்போது, பரபரப்பான விஷயம் ஒன்று போலீசார் கண்ணில் பட்டுள்ளது. ஆசிப் வீட்டில் இருந்த தொலைக்காட்சியின் திரையின் மீது, மார்க்கர் ஒன்றை பயன்படுத்தி, "ஐ லவ் யூ" என திருடர்கள் எழுதிச் சென்றிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

goa burglars write i love you in tv after theft

ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த போலீசார் மற்றும் ஆசிப் ஆகியோர், திருடர்களின் செயலைக் கண்டு, மேலும் குழம்பி போயுள்ளனர். அடையாளம் தெரியாத குற்றவாளிகள் மீது, திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்களை கண்டுபிடித்து கைது செய்வோம் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் கூட, கேரளாவில் ஒரு மர்ம  கும்பல் ஒன்று, நிதி நிறுவனத்தில் இருந்த பணத்தை திருடுவதற்கு முன்பாக, பூஜை நடத்தி கடிதம் எழுதி வைத்து விட்டு போன சம்பவமும் அதிகம் பரபரப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Nenjuku Needhi Home
THIEVES, ROBBERY, GOA, TELEVISION

மற்ற செய்திகள்