‘நமஸ்தே எலக்‌ஷன் கமிஷன்.. ரூ.75 லட்சம் தர்றீங்களா? கிட்னிய வித்துக்கவா?’.. புதுசு புதுசா கெளம்புறாய்ங்களே!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிகழும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள கடிதத்தில் அவர் கேட்டுள்ள உதவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

‘நமஸ்தே எலக்‌ஷன் கமிஷன்.. ரூ.75 லட்சம் தர்றீங்களா? கிட்னிய வித்துக்கவா?’.. புதுசு புதுசா கெளம்புறாய்ங்களே!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் பால்காட் பாராளுமன்ற தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பவர் கிஷோர் சம்ரிஷ்.  முன்னதாக சமாஜ்வாடி கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டவர் இவர். அப்போதைய நேரத்தில் இவருக்கான எல்லா செலவுகளையும் கட்சியே பார்த்துக் கொண்டது. ஆனால் தற்போது சுயேட்சையாக போட்டியிடும் இவருக்கு தேர்தல் செலவுகளை சமாளிக்க இயலவில்லை. தானே செலவு செய்யவேண்டியுள்ளது.

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் செலவுகளுக்கு அதிகபட்சமாக ரூபாய் 75 லட்சத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. ஆனால் சுயேட்சை வேட்பாளரான இவரால் அந்த அளவிற்கும் கூட தொகையை செலவழிக்க முடியாததால் தேர்தல் கமிஷனுக்கு இவர் எழுதியுள்ள கடிதம்தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த கடிதத்தின்படி தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச செலவு வரம்பான 75 லட்ச ரூபாய் வரை செலவழிப்பதற்கு கூட தன்னிடம் பணம் இல்லாத காரணத்தினாலும், தனக்கு எதிராக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் ஊழல் செய்து லஞ்சம் பெற்று அதிகம் சம்பாதித்தவர்கள் என்பதாலும், சுயேட்சையாக போட்டியிடும் தன்னுடைய தேர்தல் செலவுகளுக்கு உண்டான 75 லட்சம் ரூபாயை தேர்தல் ஆணையம்தான் அளிக்க வேண்டும் என்றும் அப்படி இல்லாவிடில் தனது சிறுநீரகத்தை விற்று பணம் திரட்டுவதற்காகவது அனுமதியை வழங்க வேண்டும் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

LOKSABHAELECTIONS2019, ELECTIONCOMMISSION, CANDIDATE, MADHYAPRADESH