ராணுவ வீரரின் காலை தொட்டு வணங்கிய சிறுமி.. MP பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ராணுவ வீரர் ஒருவருடைய காலில் விழுந்து சிறுமி ஒருவர் ஆசிர்வாதம் பெறும் வீடியோ சமூக வலை தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
ராணுவத்தில் பணிபுரிவது எளிதான காரியம் இல்லை. எந்த நேரத்திலும் பொதுமக்களுக்கு சேவை செய்வதையே கடமையாக கொண்டு பணியாற்றும் ராணுவ வீரர்கள் என்றுமே போற்றுதலுக்கு உரியவர்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைக்கும் இந்த வீரர்கள், பொதுமக்களுக்கு ஓர் இடையூறு என்றால் உடனடியாக ஓடோடிச்சென்று உதவவும் எப்போதும் தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில், ராணுவ வீரர்களை போற்ற பொதுமக்களும் தவறுவதில்லை. தேசிய தினங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நாளும் நாட்டுக்காக போராடும் வீரர்களை நினைவுகூர்வது நம்முடைய கடமையாகும்.
வீடியோ
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த லோக் சபா எம்பியான பி.சி.மோகன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் சிலர் தங்களுடைய சீருடையில் நிற்கின்றனர். சக வீரருடன் ஒருவர் பேசிக்கொண்டிருக்க தயங்கி தயங்கி அங்கு சிறுமி ஒருவர் செல்கிறார். சிறுமியை கண்டவுடன் அந்த வீரர் மகிழ்ச்சியடைந்து அவரது தலையை வருட நினைக்கும்போது திடீரென சிறுமி செய்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழ செய்திருக்கிறது கருப்பு நிற உடை அணிந்திருக்கும் அந்த சிறுமி, வீரரின் காலை தொட்டு வணங்கவே, திகைத்துப்போன அந்த வீரர் சிறுமியை வாழ்த்துகிறார். இதனையடுத்து அங்கிருந்த சக வீரர்கள் புன்னகை செய்கின்றனர்.
கடமை
இதனிடையே பி.சி.மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து, அதில்,"குழந்தைகளை தேச பக்தி மிகுந்தவர்களாக வளர்ப்பது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். ஜெயஹிந்த்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவின் இதுவரையில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தொடர்ந்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
மேலும், நெட்டிசன்கள்,"மயிர்கூச்சரியும் வீடியோ" என்றும் "இதுபோல ராணுவ வீரர்களை மதிக்கும் வகையில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும்" எனவும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
Raising patriotic young minds is a duty every parent owes to this great nation.
Jai Hind 🇮🇳 pic.twitter.com/mhAjLbtOvG
— P C Mohan (@PCMohanMP) July 15, 2022
மற்ற செய்திகள்