’பொண்ணுங்க எதுக்கு கிரிக்கெட் விளையாடணும்…’- வைரல் ஆகும் கங்குலியின் பழைய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் இந்நாள் பிசிசிஐ தலைவரும் ஆக இருக்கும் சவுரவ் கங்குலி பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. பிசிசிஐ தலைவர் ஆக கங்குல் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என இந்தியாவின் அனைத்து கிரிக்கெட் அணிக்கும் இவர் தான் பொறுப்பானவர்.

’பொண்ணுங்க எதுக்கு கிரிக்கெட் விளையாடணும்…’- வைரல் ஆகும் கங்குலியின் பழைய வீடியோ..!

இந்த சூழலில் ‘பெண்கள் கிரிக்கெட் விளையாட அவசியம் இல்லை’ என கங்குலி கூறியிருக்கும் பழைய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. ஜ்பெங்கால் சேனல் ஒன்றுக்கு முந்தைய ஒருமுறை கங்குலி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில் நிகழ்ச்சியாளர், சச்சின் மகன் அர்ஜுன் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளது குறித்து எடுத்துச் சொல்லி, ‘உங்கள் மகள் சனா கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டால் என்ன சொல்வீர்கள்?’ எனக் கேட்கிறார்.

’Girl’s don’t need to play cricket, old video of Ganguly is viral

அதற்கு பதில் அளித்த கங்குலி, “எனது மகளின் நான் கிரிக்கெட் விளையாட வேண்டாம் என்று தான் சொல்வேன். பெண் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார். இந்த பழைய வீடியோ தான் தற்போது சமுக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கோலி- கங்குலி பிரச்னை இந்திய கிரிக்கெட் உலகில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் சூழலில் நெட்டிசன்கள் இந்த பழைய வீடியோவை வைத்து கங்குலியை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, தற்போது இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் பெரும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மிதாலி ராஜ், ஜுலன் கோஸ்வாமி, ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோர் சர்வதேச அளவில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’Girl’s don’t need to play cricket, old video of Ganguly is viral

தற்போது கோலி விவகாரத்தில் கங்குலி சரியாக நடக்கவில்லை என ரசிகர்கள் உட்பட பல பிரபலங்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். கேப்டன்ஸி விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ஒருவரும், பிசிசிஐ- யின் தலைவருமே ஒற்றைக் கருத்தைக் கூறாதது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதையடுத்து கங்குலி தரப்பு, ‘கோலி கூறியது பற்றி கருத்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. பிசிசிஐ இதைப் பின்னர் சரியான வழியில் கையாளும்’ என்று முடித்துக் கொண்டது. இது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்றே கூற வேண்டும்.

SOURAVGANGULY, GANGULY, VIRAT KOHLI, BCCI, பிசிசிஐ, கங்குலி

மற்ற செய்திகள்