‘அந்த ஊர்ல இது எதுவுமே இல்ல’!.. நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை ‘அதிரடியாக’ நிறுத்திய இளம்பெண்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்தக்கோரி இளம்பெண் வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘அந்த ஊர்ல இது எதுவுமே இல்ல’!.. நிச்சயிக்கப்பட்ட கல்யாணத்தை ‘அதிரடியாக’ நிறுத்திய இளம்பெண்..!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ரீனா சிங் குர்ஜார் (22). அறிவியல் பட்டதாரியான இவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது தந்தை காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சுர்லா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞருடன் ரீனா சிங்கின் விருப்பத்துக்கு மாறாக அவரது பெற்றோர் திருமணம் நிச்சயதார்த்தம் செய்துள்ளனர்.

இதனை அடுத்து இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட ரீனா சிங்,‘எனது விருப்பத்தை கேட்காமல் ஜுலை 1ம் தேதி எனது பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த கிராமத்தில் கழிவறையோ, குளியலறையோ இல்லை. பெண்களின் பாதுகாப்பிற்கு தேவையான எந்த அம்சமும் இங்கே இருப்பதாக தெரியவில்லை. இங்கே உள்ள பெண்களுக்கு போதிய கல்வியும் வழங்கப்படவில்லை. எனக்கு வேலை கிடைக்கும் வரை திருமணம் செய்யும் யோசனை இல்லை’ என கூறியுள்ளார். மேலும் தனது திருமணத்தை தடுத்து நிறுத்த உதவி செய்யுமாறு வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, இந்த சம்பவம் காவல்துறையினர் கவனத்திற்கும் சென்றது. இதனையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்தனர். ஜூலை 1ம் தேதி நடக்கவிருந்த திருமணத்தை ரத்து செய்வதாக பெண்ணின் குடும்பத்தினரிடம் எழுதி வாங்கி, திருமணம் நடக்காமல் தடுத்தனர்.

மற்ற செய்திகள்