The Legend
Maha Others

"அவ அம்மா இறந்த கொஞ்ச நாள்லயே அப்பாவும் விட்டுட்டு போய்ட்டாரு.. ஆனா இப்போ..".. CBSE தேர்வில் சாதிச்ச பேத்தியை நினச்சு உருகிய பாட்டி..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அம்மா இறந்தபிறகு அப்பாவும் கைவிட்ட நிலையில் பாட்டியின் துணையில் வாழ்ந்து வரும் மாணவி ஒருவர் CBSE 10 ஆம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். இதனால் அவரது குடும்பமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

"அவ அம்மா இறந்த கொஞ்ச நாள்லயே அப்பாவும் விட்டுட்டு போய்ட்டாரு.. ஆனா இப்போ..".. CBSE தேர்வில் சாதிச்ச பேத்தியை நினச்சு உருகிய பாட்டி..!

Also Read | நடு பாலைவனத்துல சவூதி அரேபியா செய்ய இருக்கும் அற்புதம்.. 75 மைல் நீளமாம்.. செலவை கேட்டாலே தலை சுத்திடும்போலயே..!

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. விடைத்தாள் திருத்தும் பணிகள் நாடுமுழுவதும் நடைபெற்று வந்த வேளையில் கடந்த 22 ஆம் தேதி காலை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் அதேநாள் பிற்பகலில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இந்நிலையில், தாய் மற்றும் தந்தையின் அரவணைப்பு இல்லாமல் பாட்டியுடன் வசித்துவரும் மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பு தேர்வில் 99.4 சதவீத மதிப்பெண்களை பெற்று அசத்தியிருக்கிறார்.

பிரிவு

பீஹார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் சிறுவயதில் இருந்த போது இவருடைய தாய் மரணமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவரது தந்தை அவரைவிட்டு பிரிந்திருக்கிறார். அதன்பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட அவர் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தனது தாய்வழி பாட்டியுடன் வசித்துவரும் ஸ்ரீஜா அருகில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவருகிறார்.

Girl Abandoned By Father Gets 99.4 Percent In Class 10

இந்த வருடம் 10 ஆம் வகுப்புக்கான தேர்வு எழுதிய ஸ்ரீஜா அறிவியல் மற்றும் சமஸ்க்ருதத்தில் 100 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார். ஆங்கிலம் கணக்கு மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் 99 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார் ஸ்ரீஜா.

வருத்தப்படுவாரு

இதுகுறித்து பேசிய ஸ்ரீஜாவின் பாட்டி,"மனைவி இறந்த உடனேயே மகளை விட்டு அவரது தந்தை பிரிந்துவிட்டார். வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு அவர் வசித்துவருகிறார். இன்று எனது பேத்தி பெற்ற மதிப்பெண்களை பார்த்து நான் அளவில்லா மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் இப்படி ஒரு மகளை பிரிந்துவிட்டோமே என்று அவர் வருத்தப்படுவார் என நினைக்கிறேன்" என்றார் உருக்கமாக.

இந்த வீடியோவை எம்பி வருண்காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில்,"தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு பற்றிய அற்புதமான வீடியோ. என்னால் உங்களுக்கு உதவ முடிந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையே இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

 

Also Read | சூரியனை சுத்தி தோன்றிய வானவில் வட்டம்.. அதுவும் 22 டிகிரிக்கு.. ஆராய்ச்சியாளர்கள் சொல்லிய சுவாரஸ்ய தகவல்..வைரல் வீடியோ..!

CBSE, GIRL, FATHER, CBSE EXAM

மற்ற செய்திகள்