"ஒரு மீனோட விலை 13 லட்சமா??.." வாயடைத்து போன நெட்டிசன்கள்.. அப்படி என்ன தான் இருக்கு அதுல??
முகப்பு > செய்திகள் > இந்தியாமேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபூர் என்னும் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது, அவர்களுக்கு கிடைத்த மீனும், அது ஏலத்தில் விற்பனை ஆன விலையும், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
மேற்கு வங்கத்தின் டிகா என்னும் பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு நின்றுள்ளனர். அப்போது, அவர்களின் வலையில், Telia Bhola என்ற வகையைச் சேர்ந்த மீன் ஒன்று சிக்கி உள்ளது.
மொத்தம் 55 கிலோ எடை கொண்ட இந்த மீனை, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக, மீன் ஏல மையத்தில் இருந்தவர்கள் போட்டி போட்டு ஏலம் போட்டுள்ளனர்.
வியப்பை ஏற்படுத்திய மீனின் தொகை
இறுதியில், ஒரு கிலோவுக்கு 26,000 ரூபாய் வைத்து மொத்தம் 13 லட்சம் ரூபாய்க்கு, Telia Bhola மீனை ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். சில ஏல விதிகள் மற்றும் நிபந்தனைகள் படி, மீனின் எடையான 55 கிலோவில் இருந்து, அதன் வயிற்றில் இருக்கும் முட்டையின் எடையை குறைத்து, 50 கிலோவுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த ராட்சத மீனை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்ததை அறிந்து, ஏராளாமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள், நேரில் வந்து கண்டு சென்றனர்.
இது தான் காரணம்..
இந்த Telia Bhola வகை மீன், அதன் நீண்ட குடலுக்கு பெரிதும் பெயர் போனது. மேலும், இந்த குடல் மருந்து மாத்திரை தயாரிக்க பயன்படும் என்பதால் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. அதே போல, இதன் சவ்வானது நீரில் எளிதில் கரைந்து விடும் என்பதால், பல பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் இதனை வாங்கிச் செல்கின்றன. மீனவர் வலையில் சிக்கி, ஏலத்தில் போன இந்த மீன், பெண் மீன் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசும் மீனவர் ஒருவர், வலையில் சிக்கியது ஆண் மீனாக இருந்திருந்தால், நிச்சயம் 20 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயிருக்கும் என தெரிவித்துள்ளார். இது போன்ற ராட்சத Telia Bhola மீன்கள், ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தான் வரும். மேலும், இந்த மீனை பிடித்த மீனவரும் ஒரே மீனால், செல்வந்தராக மாறி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "அக்னிபத்'ல வேலைக்கு போனா, பசங்களுக்கு கல்யாணம் நடக்கிறதே கஷ்டம்.." மேகாலயா ஆளுநரின் பரபரப்பு கருத்து
மற்ற செய்திகள்