செம போர் அடிக்குது...! 'எவ்ளோ நாள் தான் தண்ணியிலயே கிடக்குறது...' நமக்கும் 'லைஃப்ல' ஒரு 'சேஞ்ச்' வேணும் இல்லையா...! - வைரல் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடக மாநிலத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் திடீரென ராட்சத முதலை ஒன்று மனிதர்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் வலம் வந்தது. அதனைக் கண்ட பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளில் தான் வாழ்ந்து வரும். எத்தனை காலம் தான் நீரில் வாழ்வது, ஒரு மாற்றம் இருக்கட்டுமே என்பது போல், கர்நாடக மாநிலத்தில் உள்ள கோகிலபனா என்ற பகுதியில் திடீரென மனிதர்கள் வாழும் வீதியில் ராட்சத முதலை ஒன்று புகுந்து உலா வந்தது.
முதலை வந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த வீடியோ தற்போது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடனடியாக அந்த முதலையை பிடித்துச் சென்று ஆற்றில் கொண்டுபோய் விட்டனர். ராட்சச முதலை ஒன்று தெருவில் சர்வ சாதாரணமாக உலா வந்ததை பார்த்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
#WATCH Karnataka | A crocodile found strolling through Kogilban village in Dandeli. Later, forest officials rescued the crocodile & released it into the river. pic.twitter.com/2DDk7JuOB8
— ANI (@ANI) July 1, 2021
மற்ற செய்திகள்