“இத பண்ணலனா, ரஷ்யாவின் கொரோனா மருந்து ஆபத்துதான்!”.. “ஆனா எங்க கிட்ட இருந்து மருந்து வர்றதுக்கு டைம் வந்தாச்சு!” .. ‘அதிரடியாக அறிவித்த நாடு!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி எப்போது தயாராகும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ள இந்த தகவலின்படி, ரஷ்ய தடுப்பூசி போதுமான அளவுக்கு பரிசோதிக்கப்படாவிட்டால், மில்லியன் கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடுவது ஆபத்தாகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமையன்று கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு ரஷ்யா என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். ஆனாலும் ரஷ்யாவின் தடுப்பூசி மீது உலகமெங்கிலும் உள்ள நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தொடர் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் அடுத்து வரும் மாதங்களில் நிச்சயமாக ஜெர்மனியிடம் இருந்து கொரோனா தடுப்புசி எதிர்பார்க்கலாம் என்று ஜென்ஸ் ஸ்பான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம் அது எந்த மாதம் என்றும் அவர் குறிப்பிட மறுத்துள்ள நிலையில், மக்களுக்கு எத்தனை முறை தடுப்பூசி போட வேண்டும் அல்லது தடுப்பூசியின் நோய் எதிர்ப்புசக்தி, எவ்வளவு காலம் நீடிக்கும் என்று இப்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்றாக செயல்பட்டதற்கு நன்றி தெரிவித்த அவர் மனிதகுல வரலாற்றில் இதற்கு முன்பாக இருந்ததை விடவும் இம்முறை தடுப்பூசி நம்மை விரைவாக வந்தடையும் என்றும் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்