கூகுள் மேப் 'இந்த வழியா' தாங்க போக சொல்லுச்சு...! 'ஷார்ட் கட்னு நம்பி வந்த ஜெர்மன் டூரிஸ்ட்கள்...' - எப்படி வந்து சிக்கியிருக்காங்க பாருங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகூகுள் மேப்பை நம்பி சேற்றில் ஐ10 காருடன் சிக்கியுள்ளனர் ஜெர்மன் டூரிஸ்ட்கள்.
பொதுவாகவே தெரியாத ஊர்களுக்கு சென்றால் பலர் கூகுள் மேப் துணைக்கொண்டு தான் சுற்ற வேண்டும். ஆனால், சில நேரங்களில் கூகுளும் நம்மை கைவிட்டு விடும் அந்த மாதிரியான நிலைதான் இந்தியாவிற்கு வந்த டூரிஸ்ட்களுக்கு நடந்துள்ளது.
ஜெர்மனி டூரிஸ்ட்கள் சிலர் மற்றும் மற்றும் உத்தரகாண்டை சேர்ந்த நபர்கள் கிராண்ட் ஐ10 காரில் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனர். இவர்களின் பயணம் கூகுள் மேப்புடன் தொடங்கியுள்ளது.
பொதுவாகவே கூகுள் மேப்பில் சீக்கிரம் செல்வதற்கான ஆல்டர்நெடிவ் ரூட்டைகளை காட்டும். அதுபோல, உதய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தபோது கூகுள் மேப் மற்றொரு ஆல்டர்நெடிவ் ரூட்டை காட்டியுள்ளது.
இந்த ரூட்டில் சென்றால் வேகமாக செல்லலாம் என கூகுள் கூறவே யாரிடமும் விசாரிக்காமல் உடனே காரை திருப்பியுள்ளனர். அந்த சாலை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும், உள்ளே செல்ல செல்ல சாலை மோசமாக இருந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் ஒரு இடத்தில் கார் நகராமல் நின்றுள்ளது, கீழே இறங்கி பார்த்தபோது தான் கிராண்ட் ஐ10 கார் சேற்றில் நன்றாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. அங்கிருந்த அப்பகுதி மக்களிடம் விசாரிக்கும் போது தான் அவர்கள் வந்தது ஒரு ஒத்தையடி பாதை என்பது தெரியவந்துள்ளது.
அதன்பின் உள்ளூர் மக்கள் டிராக்டரின் உதவியைக் கொண்டு காரை சேற்றில் இருந்து மீட்டுக்கொடுத்துள்ளனர்.
சுமார் 1 மணிக்கு சேற்றில் சிக்கிய கிராண்ட் ஐ10 காரை டிராக்டரின் உதவியுடன் காரை மாலை 6 மணிக்கு மீட்டுள்ளனர். அதோடு காரில் வந்த நபர்கள் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் அந்த சேற்றில் டூரிஸ்ட்கள் நடந்து சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்