'ரூ 1-க்கு ஒரு வேளை பசி போகும்...' 'ஏழைகளின் பசியை போக்க...' - கெளதம் காம்பீரின் 'ஜன் ரசோய்' உணவகம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெளதம் காம்பீர் ரூ.1க்கு உணவு விற்பனை செய்யும் உணவகத்தை திறந்துள்ளார்.

'ரூ 1-க்கு ஒரு வேளை பசி போகும்...' 'ஏழைகளின் பசியை போக்க...' - கெளதம் காம்பீரின் 'ஜன் ரசோய்' உணவகம்...!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிழக்கு டெல்லி தொகுதியின் எம்.பி-யுமான காம்பீர், அடித்தட்டு மக்களுக்கு பயன்படும் வகையில் ரூ.1-க்கு உணவு வழங்கும் 'ஜன் ரசோய்' எனும் உணவகத்தை திறந்துள்ளார்.

இந்த உணவகம் கடந்த கடந்த 2019 டிசம்பரிலேயே தொடங்கப்பட்டது. தற்போது, நியூ அசோக் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே சமயத்தில் 50 பேர் சாப்பிடும் வகையில் திறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறிய காம்பீர், 'நான் அரசியலுக்கு வந்தது நாடகம் நடத்தவோ அல்லது தர்ணா செய்யவோ அல்ல. என்னால் ஒரு உண்மையான மாற்றம் வேண்டும் என்பதற்காகத்தான் வந்தேன், இதுமாதிரியான விஷயங்களையும் செய்கிறேன். என்னிடம் இருப்பவையை கொண்டு சமுதாயத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்கிறேன். இதில் என்னுடைய பங்குடன் முடிந்துவிடாமல், ஓர் இயக்கமாக மாற வேண்டும்' எனக் கூறினார்.

மற்ற செய்திகள்