60-வது பிறந்தநாளுக்கு 60 ஆயிரம் கோடி நன்கொடை.. கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்த அதானி.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தொழிலதிபரும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரருமான கௌதம் அதானி தனது 60வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது பலரையும் திக்குமுக்காட செய்திருக்கிறது.

60-வது பிறந்தநாளுக்கு 60 ஆயிரம் கோடி நன்கொடை.. கஷ்டப்படும் மக்களுக்கு உதவ முன்வந்த அதானி.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்..!

Also Read | "இனிமே அப்பா தேவையில்ல.." திருநங்கையாக மாறிய எலான் மஸ்க் மகன்.. பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி..

அதானி குழுமத்தின் தலைவரும் ஆசியாவின் மிகப்பெரும் பணக்காரருமான கவுதம் அதானியின் பிறந்தநாள் இன்று (ஜூன் 24) கொண்டாடப்பட்டு வருகிறது. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி அதானியின் சொத்து மதிப்பு 95 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். இந்நிலையில் அதானியின் 60வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலம் பெறும் வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக அளிக்க இருப்பதாக அதானியின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இந்த தொகை அதானி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டு நாடு முழுவதும் கல்வி, மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்கு இந்த தொகை செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதானி அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் மனித வளத்தின் திறனை முழுமையாக பயன்படுத்த சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள குறைபாடுகள் 'ஆத்மநிர்பர் பாரத்' திட்டத்திற்கு தடையாக உள்ளன. அதானி அறக்கட்டளை இப்பகுதிகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை சாத்தியமாக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. எதிர்வரும் சவால்களையும் போட்டிகளையும் சமாளித்து எதிர்காலத்துக்காக செயல்படுவோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gautam Adani pledged to donate 60,000 crores on his 60th birthday

தந்தையின் 100வது பிறந்த நாள்

கௌதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானி அவர்களின் 100வது பிறந்த நாள் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாகவும் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருக்கிறார் அதானி. இதுகுறித்து அதானி பேசுகையில் "என்னுடைய தந்தை சாந்திலால் அதானியின் நூறாவது பிறந்த நாள் இந்த ஆண்டு வருகிறது. மேலும் என்னுடைய 60-வது பிறந்தநாள் ஜூன் 24ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு எனது குடும்பத்தினர் 60 ஆயிரம் கோடிக்கு கல்வி, மருத்துவம் திறன் மேம்பாடு உள்ளிட்ட சமூக நல உதவிகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த தொகை அதானி அறக்கட்டளை மூலம் கிராமப்புறங்களில் வளர்ச்சியை மேம்படுத்த பயன்படுத்தப்படும். நலத் திட்டங்களை முன்னெடுப்பது, எந்தெந்த துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது குறித்து வல்லுனர்களின் உதவியையும் ஆலோசனைகளையும் கேட்க இருக்கிறோம்" என தெரிவித்தார்.

பிரபல தொழிலதிபரான கௌதம் அதானி தனது 60வது பிறந்தநாளில் சமூக நலத் திட்டங்களுக்காக 60 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை வழங்குவதாக அறிவித்தது,  இணையதளம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது

Also Read | "எனக்கு பெருமையா தான் இருக்கு.!".. தமது அங்கங்கள் குறித்து இணையத்தில் எழுந்த விமர்சனம்..! முன்னாள் இலங்கை எம்.பி அதிரடி பதில்..

GAUTAM ADANI, DONATE, BIRTHDAY, கவுதம் அதானி

மற்ற செய்திகள்