'ரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு...' 'நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட மக்கள்...' '50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டம்...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் மீண்டும் வாயு கசிவு வெளியேறியதால் 3 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள மக்கள் அவசர அவசரமாக  வெளியேற்றப்பட்டனர்.

'ரசாயன ஆலையில் மீண்டும் வாயு கசிவு...' 'நள்ளிரவில் வெளியேற்றப்பட்ட மக்கள்...' '50க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டம்...'

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், தென் கொரிய ரசாயன தொழிற்சாலையிலிருந்து,நேற்று அதிகாலை 'ஸ்டைரீன்' என்ற விஷவாயு கசிந்தது.  இந்த விஷவாயு ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டி, காற்றில் வேகமாகப் பரவியது. சுமார் 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய இந்த விஷவாயுவால் ஐந்து கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளில் துாங்கிக் கொண்டிருந்தவர்கள், மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொழிற்சாலைக்குள் பணியில் இருந்த தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை.

பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், நள்ளிரவில் மீண்டும் ஆலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்த 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்ரகள் தொழிற்சாலைக்குள் புகுந்து வாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து 3 கி.மீ. சுற்றளவில் வசித்துவந்த அப்பகுதி கிராமவாசிகள் நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது.