'என்னங்கடா ஆடி தள்ளுபடி ஆஃபர் போல விளம்பரம் கொடுக்குறீங்க'... 'ஒரே ஒரு விளம்பரத்தால் அதிரவைத்த கும்பல்'... வைரலாகும் போஸ்டர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆடித் தள்ளுபடி, தீபாவளி பண்டிகைக்கு விளம்பரம் கொடுப்பது போலக் கூலிப்படை ஒன்று கொடுத்துள்ள விளம்பரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகரைச் சேர்ந்த ஒரு கும்பல் ஒன்று தங்களது தொலைப்பேசி எங்களுடன் விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார். அதில் போடப்பட்டிருந்த விலைப் பட்டியல் தான் பலரின் அதிர்ச்சிக்குக் காரணம். அந்த கும்பல் மக்களைத் துன்புறுத்துவது முதல் அவர்களைக் கொல்வது வரையிலான குற்றங்களைச் செய்ய வசூலிக்கப்படும் விலைப்பட்டியல் குறித்து அதில் குறிப்பிட்டிருந்தது.
அதில் குறிப்பிட்டு உள்ள விளக்கப்படத்தின்படி, இந்த தொகை ரூ.10,000-55,000 வரை உள்ளது, யாரையாவது மிரட்ட வேண்டுமா ரூ. 1000, அவர்களை அடிக்க ரூ.5 ஆயிரம், தாக்கி காயப்படுத்த வேண்டுமா,ரூ.10,000 கொலை செய்ய ரூ.55,000 வசூலிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. மேலும் அதிக தொடர்பு கொள்ள தொலைப்பேசி எண்ணும் துப்பாக்கிகள் படமும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த விலைப்பட்டியல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
உத்திரபிரதேசத்தின் சட்டம் ஒழுங்கிற்கு இதுவே சாட்சி என நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து இந்த போஸ்டர் உத்திர பிரதேச காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. மக்களைக் காயப்படுத்திய அல்லது அச்சுறுத்தியதற்காக இந்த விலைப்பட்டியல் பதிவேற்றிய நபரை அவர்கள் தேடத் தொடங்கினர். அப்போது விலைப்பட்டியலைப் பதிவேற்றிய இளைஞர்கள் சரதவல் காவல் நிலைய பகுதியின் சவுக்கடா கிராமத்தில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டனர்.
அந்த இளைஞன் பிஆர்டி ஜவானின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
மற்ற செய்திகள்