'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மத்திய பிரதேசத்தில் தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்கிற ஐதீகம் உள்ளது.

'திருமணம் ஆகி 2 மாசம்'.. 'கொட்டோ கொட்டுனு’.. மழை பெய்ததால்.. நடந்த 'விவாகரத்து' சம்பவம்!

இதே போல் கடந்த ஆண்டு, கர்நாடகாவில் தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்து ஹனிமூனுக்கு அனுப்பிய சம்பவம் கூட நிகழ்ந்தது. இந்த நிலையில் மழை பொழிய வேண்டும் என்பதற்காக கடந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசத்தில் ஆஷாத் உத்சவ் என்கிற பெயரில் தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

அந்தத் திருமணம் நிகழ்வில் மாநில அமைச்சர் ஒருவரும், உள்ளூர் பாஜக தலைவர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதேபோல் கடந்த ஜூலை மாதமும் மழை பொழிய வேண்டி, இரண்டு தவளைகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிக மழை பொழிந்த நிலையில், மீண்டும் அந்த தவளைகளுக்கு விவாகரத்து செய்யப்படுவதற்காக சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்திரபுரி பகுதியில் உள்ள ஓம் ஷிவ் சேவா ஷக்தி மண்டல் என்ற அமைப்பு நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில் மணமக்களாக இருந்த அந்த 2 தவளைகளும் தற்போது கிடைக்காத நிலையில், இம்முறை 2 பொம்மை தவளைகளுக்கு விவாகரத்து செய்துவைக்கப்பட்டது.

RAIN, HEAVYRAIN, MADHYAPRADESH, FROG, MARRIAGE