உன் கல்யாணத்துல உழைச்சதுக்கு இதுதான் பரிசா..? கடுப்பான மணமகனின் நண்பர்கள்.. 50 லட்சம் கேட்டு மானநஷ்ட வழக்கு ..கலவரமான கல்யாண வீடு.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரகாண்ட் மாநிலத்தில் மணமகன் மீது அவரது நண்பர்கள் மான நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
திருமணம் என்றாலே பலவித சிக்கல்களை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான். திருமண ஏற்பாடுகள், உறவினர்கள் சொல்லும் காரணங்கள்,மணமகன் மற்றும் மணமகள் என பலரது மூலமாக திருமணத்தில் சிக்கல் ஏற்பட்டு பார்த்திருப்போம். உத்திரகாண்ட் மாநிலத்தில் மணமகனின் நண்பர்களே மாப்பிள்ளை மீது வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். இந்த வழக்கு பலரையும் அதிர வைத்திருக்கிறது.
திருமணம்
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள பஹதுராபாத் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்யாண வேலைகள் விமர்சையாக நடைபெற்று வந்தன. இதனிடையே திருமண பத்திரிகைகள் அச்சடித்து வாங்கிய ரவி அதனை வினியோகிக்கும் பொறுப்பை தனது நண்பர்களிடம் ஒப்படைக்க முடிவெடுத்திருக்கிறார்.
இதனையடுத்து ரவி தனது நண்பரான சந்திரசேகர் என்பவரது வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது தனது திருமண அழைப்பிதழ்களை உறவினரால் மற்றும் நண்பர்களுக்கு கொடுக்கும்படியும், திருமண வேலைகளை கவனித்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறார்.
கோபம்
ரவியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சந்திர சேகரும் திருமண வேலைகளை பார்த்துவந்திருக்கிறார். அதனுடன், ரவியின் திருமண அழைப்பிதழ்களை வினியோகமும் செய்திருக்கிறார். இதனிடையே திருமண அழைப்பிதழில் குறிப்பிட்டபடி திருமண ஊர்வலத்துக்கு மாலை 5 மணிக்கு கிளம்பி சென்றிருக்கிறார்கள் சந்திர சேகர் மற்றும் அவரது நண்பர்கள். ஆனால், அதற்கு முன்பே ரவி ஊர்வலத்திற்கு கிளம்பிச் சென்றிருக்கிறார்.
இதனையடுத்து கல்யாண மாப்பிள்ளையான ரவிக்கு போன் செய்து சந்திர சேகர் விசாரித்திருக்கிறார். அதற்கு, ஊர்வலத்துக்கு தாமதமாக வந்துவிட்டதாக சந்திர சேகர் உள்ளிட்ட நண்பர்களை திட்டி, வீட்டுக்கு செல்லும்படி ரவி கூறியதாக தெரிகிறது.
வழக்கு
திருமணத்துக்கு ஓடி ஓடி உழைத்த தங்களை அவமானப்படுத்திவிட்டதாக கூறி சந்திரசேகர் மற்றும் அவரது நண்பர்கள் ரவி மீது வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர் நண்பர்கள்.
ரவி இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக சந்திரசேகர் தரப்பு தெரிவித்திருக்கிறது. திருமண ஊர்வலத்திற்கு லேட்டாக வந்ததாக மணமகன் திட்டியதால் அவரது நண்பர்கள் 50 லட்சம் கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பது அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
மற்ற செய்திகள்