"கொரோனா தடுப்பூசி போட்டிங்களா.?.. வாங்க Free ஆ சாப்பிடலாம்".. பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட நபரின் அடுத்த அறிவிப்பு.. ஆஹா என்ன மனுஷன்யா..!
முகப்பு > செய்திகள் > இந்தியாசண்டிகர் மாநிலத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு சோலே பாதுரே-வை வழங்கி பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார் ஒருவர்.
Also Read | எலான் மஸ்க்கின் புதிய பிளான்.. இத யாருமே யோசிச்சிருக்க மாட்டாங்க.. மொத்த அமெரிக்காவும் ஷாக் ஆகிடுச்சு..!
கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் பகுதியில் இருந்து பரவியதாக சொல்லப்படும் கொரோனா வைரஸ், உலகெங்கிலும் மிகப் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களிலேயே உலக நாடுகள் முழுவதும் பரவிய இந்த வைரஸ், லட்சக்கணக்கான உயிரிழப்பிற்கும் காரணமாக அமைந்தது. இதனால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை பல முன்னணி நிறுவனங்கள் உருவாக்கின. இவை புழக்கத்திற்கு வந்த பின்னர் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன. ஆகவே, உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
இலவச உணவு
இந்நிலையில், சண்டிகர் மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் ராணா என்பவர் சைக்கிளில் உணவு விற்பனை செய்துவருகிறார். இவர் கடந்த ஆண்டு கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இலவசமாக சோலே பாதுரே-வை வழங்கிவந்தார். இது பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய மன் கி பாத் நிகழ்ச்சியில் அவருக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சஞ்சய். அதாவது கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இலவசமாக சோலே பாதுரே-வை வழங்குவதாக அறிவித்திருக்கிறார் சஞ்சய். அதற்கான சான்றிதழை கொடுத்துவிட்டு தங்களுடைய உணவை ருசிக்கலாம் என்கிறார் அவர்.
கவலை
இதுகுறித்து பேசிய அவர்,"மக்களிடம் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நினைத்தேன். இரண்டு டோஸ்களுடன் தடுப்பூசி பெற்றவர்கள் கட்டாயம் பூஸ்டர் டோஸையும் பெற வேண்டும். இதற்கு தகுதி பெற்றவர்களே பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வராதது கவலை அளிக்கிறது" என்றார். இந்நிலையில் இவருடைய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "மகன நெனச்சு ஒண்ணும் நான் பெருமைப்படல, ஏன்னா.." எலான் மஸ்க் பற்றி தந்தை எரோல் சொன்ன பரபரப்பு கருத்து..
மற்ற செய்திகள்