"ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!" - அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜூலை 31 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

"ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!" - அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட மாநிலம்!

இந்தியாவிலேயே கொரோனா தொற்று மூலம் அதிகம் பேர் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கும் நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டி அம்மாநில அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இதுவரை அம்மாநிலத்தில் சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

முன்னதாக மேற்கு வங்கம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்திருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவும் ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்