'கூகுள்' மேப்பில் பாதை கேட்டு.. நேராக போலீசிடம் 'சிக்கிய' மாணவர்கள்.. என்ன 'பண்ணாங்க' தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாகாட்டுக்குள் வழிதெரியாமல் கூகுள் மேப்பை நம்பி சென்ற மாணவர்கள் நேரடியாக போலீசிடம் சென்று சிக்கிக் கொண்டுள்ளனர்.
ஹைதராபாத்தில் உள்ள புச்சபள்ளியை சேர்ந்த பூரணச்சந்தர், தினேஷ், அன்வேஷ், மணிகண்டா என்கிற நான்கு மாணவர்களும் அங்குள்ள அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஆடம்பரமாக செலவு செய்யவேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. இதற்காக திட்டம் தீட்டி நண்பரின் திருமணத்திற்கு செல்லவேண்டும் என்று கூறி வேறு ஒரு நண்பரின் காரை கேட்டு வாங்கி விசாகப்பட்டினம் அரக்கு வனப்பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடந்துவரும் இடத்தில் இருந்து சுமார் இரண்டரை கிலோ கஞ்சாவை வாங்கியுள்ளனர். பின்னர் மீண்டும் காரில் ஹைதராபாத் புறப்பட்டு சென்றுள்ளனர். வனப்பகுதியில் இருந்து வெளியே செல்வதற்கு வழி தெரியாததால் தங்களுடைய செல்போனில் ஜிபிஎஸ் ஆன் செய்து அதன் மூலம் சென்றுள்ளனர். ஒருகட்டத்தில் செல்போன் சிக்னல் சரியாக கிடைக்காததால் வழி தவறி அவர்கள் கிருஷ்ணா மாவட்டம் வழியே சென்றுள்ளனர்.
அப்போது பகுதியில் தாடேபள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்து பயந்து போன மாணவர்கள் நால்வரும் காரை திருப்பிக்கொண்டு தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதைப்பார்த்த போலீசார் நால்வரையும் மடக்கிப்பிடித்து காரை சோதனை செய்ய, காரில் கஞ்சா இருந்துள்ளது. கஞ்சா கடத்திய குற்றத்திற்காக காருடன் சேர்த்து மாணவர்கள் நால்வரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.