கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா தனது விடாமுயற்சியின் பலனாக 87 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இதனையடுத்து சமூக வலை தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

கல்விக்கு வயது தடை அல்ல.. 87 வயசுல 10-வது பாஸ்.. முன்னாள் முதல்வரின் விடாமுயற்சி.. குவியும் வாழ்த்துக்கள்..!

கல்வி

உலகின் விலைமதிக்க முடியாத சொத்து கல்வி தான் என சொல்லாத மதங்களோ, புராணங்களோ உலகில் கிடையாது. அப்படிப்பட்ட கல்வியை பிச்சை எடுத்தாவது கற்றுவிடவேண்டும் என்கிறது தமிழ் இலக்கியம். கல்விக்கு வயது ஒரு தடை கிடையாது என்பதை உலகம் முழுவதும் பல்வேறு நபர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர். அந்த நெடிய பட்டியலில் தற்போது இணைந்திருக்கிறார் ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர் தன்னுடைய 87 வயதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வெழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார்.

former Haryana CM OP Chautala as he passes Class 10 at 87

ஓம் பிரகாஷ் சவுதாலா 

1935 ஆம் ஆண்டு, ஜனவரி 1 ஆம் தேதி, பாரம்பரிய அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் ஓம் பிரகாஷ் சவுதாலா. இவருடைய தந்தை தேவிலால், இந்தியாவின் துணைப் பிரதமராகவும் ஹரியானா மாநிலத்தின் முதல்வராகவும் இருந்தவர். சிறுவயது முதலே அரசியலில் ஈடுபட்டுவந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா மாநிலத்தின் தவிர்க்க முடியாத அரசியல் தலைவராக உருவெடுத்தார்.

தொடர்ந்து 4 முறை அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த போதிலும், கல்வியை தொடர முடியாத வருத்தம் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு இருந்திருக்கிறது. இதனால் முதுமையடைந்த பிறகும் கல்வி கற்க முடிவெடுத்தார் இவர்.

former Haryana CM OP Chautala as he passes Class 10 at 87

தேர்ச்சி

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓப்பன் ஸ்கூல் -ல் 2017 ஆம் ஆண்டு இணைந்த ஓம் பிரகாஷ் சௌதாலா 2019 ஆம் ஆண்டு தனது 10 ஆம் வகுப்புத் தேர்வில் பங்கேற்றார், ஆனால் ஆங்கிலத் தாளை அவரால் எழுத முடியாமல் போனது. இதன் காரணமாக அவரது 12 ஆம் வகுப்புக்கான தேர்வு எழுதும் வாய்ப்பும் தடைபட்டது. இதனையடுத்து, தொடர்ந்து விடாமுயற்சியுடன் படித்துவந்த சவுதாலா தற்போது 10 மற்றும் 12-வது வகுப்புகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்

நடிகர் அபிஷேக் பச்சன் நடிப்பில் அண்மையில் வெளிவந்த 'தாஸ்வி' (Dasvi) திரைப்படத்திலும், அரசியல்வாதி ஒருவர் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சிபெற படிப்பது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 87 வயதில் சவுதாலா 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றுள்ளதால், அப்படத்தில் நடித்திருந்த அபிஷேக் பச்சன் மற்றும் நிம்ரத் கவுர் ஆகியோர் சவுதாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

நிம்ரத் கவுர் தனது டிவிட்டர் பக்கத்தில்,"அற்புதம். வயது என்பது உண்மையில் ஒன்று அல்லது இரண்டு இலக்கம் கொண்ட எண்கள் மட்டுமே" எனக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல, அபிஷேக் பச்சனும் சவுதாலாவிற்கு டிவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

former Haryana CM OP Chautala as he passes Class 10 at 87

காஷ்மீரை சேர்ந்த அரசியல் தலைவரான ஒமர் அப்துல்லா,"கல்வி கற்க ஒருவருக்கு வயது தடையில்லை. வாழ்த்துக்கள் சவுதாலா சாப்" எனக் குறிப்பிட்டுள்ளார். தனது 87 வயதில், ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றதையடுத்து சமூக வலைத்தளங்களில் பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

 

OPCHAUTALA, HARYANA, CLASS10, ஓம்பிரகாஷ்சவுதாலா, ஹரியானா, 10ஆம்வகுப்பு

மற்ற செய்திகள்