கொளுத்தும் வெயிலில் சைக்கிள்ல உணவு டெலிவரி செஞ்ச ஊழியர்..அடுத்த 24 மணி நேரத்துல நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தானை சேர்ந்த உணவு டெலிவரி செய்யும் நபருக்கு நெட்டிசன்கள் உதவிய சம்பவம் தற்போது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
"ஆஹா.. இது அதுல்ல.".. 10-ம் வகுப்பு தேர்வில் மாணவன் எழுதிய புஷ்பா பட டயலாக்?.. வைரல் புகைப்படம்..!
உணவு டெலிவரி
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா ஷர்மா. இவர் சில தினங்களுக்கு முன்னர் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன் மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆர்டர் செய்த உணவுக்காக காத்திருந்த ஆதித்யா சரியான நேரத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர் வந்ததும் அதிர்ந்து போயிருக்கிறார். அதற்கு காரணம் உணவு டெலிவரி செய்ய வந்த நபர் கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் வந்திருந்தது தான்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதித்யா, அந்த உணவு டெலிவரி செய்யும் நபரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது ஆதித்யாவிடம் பேசிய 31 வயதான துர்கா மீனா என்னும் ஊழியர் தான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆசிரியராக பணிபுரிந்து வந்ததாகவும் கொரோனவால் வேலையிழந்த பின்னர் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் வேலைக்கு வந்ததாகவும் கூறியுள்ளார்.
கடன்
இதனால் கலங்கிப்போன ஆதித்யாவிடம்," ஏற்கனவே வங்கிகளில் வாங்கிய கடன்களை கட்டமுடியவில்லை. அதனால் என்னுடைய சைக்கிளிலேயே உணவு டெலிவரி செய்துவருகிறேன்" எனக் கூறியிருக்கிறார் துர்கா மீனா.
இதனை அடுத்து அவருக்கு உதவும் விதமாக டிவிட்டரில் பணம் திரட்ட முடிவு செய்திருக்கிறார் ஆதித்யா. தனது டிவிட்டர் பக்கத்தில் கொளுத்தும் 42 டிகிரி வெயிலில் உணவு டெலிவரி செய்த துர்கா மீனாவை குறித்து பதிவிட்டு அவருக்கு பைக் வாங்க நிதிதிரட்ட இருப்பதாகவும் நண்பர்கள் உதவுமாறும் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
பைக்
இதனை அடுத்து ஆதித்யா தனது டிவிட்டர் பக்கத்தில் துர்கா மீனா குறித்து பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் 75,000 ரூபாய் நிதி சேர்ந்திருக்கிறது. இதனை அடுத்து உள்ளூர் பைக் ஷோரூமுக்கு துர்கா மீனாவை அழைத்து சென்ற ஆதித்யா, அவருக்கு புதிய பைக் ஒன்றை வாங்கிக்கொடுத்துள்ளார். இதனால் துர்கா ராம் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவு டெலிவரி செய்த நபருக்கு ஒரே நாளில் நெட்டிசன்களின் உதவியுடன் இளைஞர் ஒருவர் புது பைக் வாங்கிக்கொடுத்த சம்பவம் தற்போது பலராலும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும், ஆதித்யாவின் முயற்சியை நெட்டிசன்கள் பாராட்டிவருகின்றனர்.
வீட்டுக்குள் கேட்ட பயங்கர சத்தம்... சென்னையில் நடந்த Money heist.. ரைடு விட்ட சென்னை போலீஸ்..!
மற்ற செய்திகள்