'இனிமேல் இந்தியாவுக்குள்ள பறக்குறதும் காஸ்டலி தான்'... 'அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்'... வெளியான முழு விவரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உள்நாட்டு விமான கட்டணத்தை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

'இனிமேல் இந்தியாவுக்குள்ள பறக்குறதும் காஸ்டலி தான்'... 'அதிரடியாக உயரும் உள்நாட்டு விமான கட்டணம்'... வெளியான முழு விவரம்!

இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுமையான பொருளாதார இழப்புகளைப் பல துறைகள் சந்தித்து வருகிறது. அதில் முக்கியமாக விமான போக்குவரத்துத் துறையும் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விமான நிறுவனங்கள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

Flying within India set to become dearer as lower limit on air fare

எனவே நெருக்கடியில் சிக்கியிருக்கும் விமான நிறுவனங்களுக்கு உதவுவதற்காக உள்நாட்டு விமான கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி முதல், உள்நாட்டு விமான கட்டணத்தில் குறைந்தபட்ச வரையறையை 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்துவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்து உள்ளது.

Flying within India set to become dearer as lower limit on air fare

அதேநேரம் அதிகபட்ச வரையறையில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் கூறப்பட்டு உள்ளது. இந்த கட்டண அதிகரிப்பின் மூலம் 40 நிமிடத்துக்கு உட்பட்ட விமான போக்குவரத்துக்கான கட்டணம் ரூ.2,300-ல் இருந்து ரூ.2,600 ஆக அதிகரிக்கும் என அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.

மற்ற செய்திகள்