தரையிறங்கும் போது ரன்வேயில் இருந்து விலகிய விமானம்.. சாமர்த்தியமாக செயல்பட்ட பைலட்.. வெளியான போட்டோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதரையிறங்கும் போது ஓடுதளத்தில் இருந்து விலகி மண் தரையில் விமானம் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் விமானநிலையத்தில் விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஏடிஆர்-72 (ATR-72) ரக விமானம் ஒன்று இன்று (12.03.2022) காலை 11.30 மணியளவில் தலைநகர் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஜபல்பூர் விமானநிலையத்திற்கு புறப்பட்டது.
இதனை அடுத்து மதியம் ஜபல்பூர் விமானநிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம், ஓடுதளத்திலிருந்து விலகி மண் தரையில் சென்றது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள், விமானத்தை பத்திரமாக நிறுத்தினர்.
அதனால் அதிர்ஷ்டவசமாக விமானம் விபத்துகுள்ளாகவில்லை. இதனை அடுத்து விமானத்தில் பயணித்த 55 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடுதளத்திலிருந்து விமானம் விலகி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Madhya Pradesh | Runway excursion occurred at Jabalpur. An Alliance Air ATR-72 aircraft, with around 55 passengers onboard from Delhi, went off the runway at Jabalpur.
All passengers are safe. pic.twitter.com/UluvwbZhHY
— ANI (@ANI) March 12, 2022
மற்ற செய்திகள்