விமானத்துல அழுதுகிட்டே இருந்த குழந்தை.. டக்குன்னு விமான பணியாளர் செய்த உதவியை பார்த்து நெகிழ்ந்துபோன பயணிகள்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிமானத்தில் அழுதுகொண்டே இருந்த குழந்தையை விமான பணியாளர் ஒருவர் தோளில் சுமந்தபடி அங்கும் இங்கும் நடந்து சமாதானம் செய்யும் வீடியோ பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.
Also Read | விருந்துல அப்பளம் வைக்காததால் ஆத்திரம்.. களேபரமான கல்யாண மண்டபம்.. தெறிச்சு ஓடிய உறவினர்கள்..
அழுத குழந்தை
உலகின் மிகவும் கடினமான காரியங்களில் ஒன்று குழந்தைகளின் அழகைக்கான காரணத்தை கண்டுபிடிப்பது. அதைவிட கடினம் அவர்களை சமாதானப்படுத்துவது. பொது இடங்களில் குழந்தைகளுடன் பயணிக்கும் நபர்கள் எப்போதும் இதுபோன்ற சிக்கலை எதிர்கொள்வது உண்டு. புது இடங்களில் தனியாளாக குழந்தையை சமாளிப்பது ரொம்பவே சிரமம். ஆனால், நல்ல உள்ளம் கொண்டவர்கள் எப்போதும் சக மனிதர்கலிக்கு உதவ தயாராகவே இருக்கிறார்கள். அப்படித்தான் நடந்திருக்கிறது ஜீவன் வெங்கடேஷ் என்பவருக்கும். இவர் தனது மகளுடன் சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்கிறார். அப்போது அவருடைய மகள் அழ துவங்கவே அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் ஜீவன். ஆனாலும் அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், இதனை பார்த்துக்கொண்டிருந்த விமான பணியாளரான நீல் மால்கம் என்பவர் அவரிடம் சென்று குழந்தையை கையில் வாங்கியிருக்கிறார். குழந்தையை தனது தோளில் கிடத்திய அவர் விமானத்தின் நடைபாதையில் அங்கும் இங்கும் நடந்தபடி சமாதானப்படுத்தியிருக்கிறார். இதனால் அந்த குழந்தை அசந்து தூங்கியிருக்கிறது. இதனைக்கண்ட பயணிகள் நெகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள்.
நன்றி
இந்நிலையில், குழந்தையின் தந்தை ஜீவன் வெங்கடேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். மேலும் அதில்,"ஏர் இந்தியா ஊழியர்களின் இனிமையான பண்பை நான் மிகவும் பாராட்டுகிறேன். விமான பணியாளர் ஒருவர் எனது மகளை தோளில் சுமந்து சமாதானப்படுத்தியது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு நன்றி. டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கியதில் இருந்து பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் அப்டேட் எனக் குறிப்பிட்டு அந்த பணியாளரை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும் அதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மற்ற செய்திகள்