தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த டி.ஐ.ஜி. சுதாகர் நடராஜன், 2019 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கை, முதலாவதாக பதிவு செய்து அசத்தியுள்ளார்.

தேர்தல் 2019: முதல் ஓட்டுப் போட்டது யார்? எந்த மாநிலத்தில் பதிவானது தெரியுமா?

மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் வரும் ஏப்ரல் மாதம் 11-ம் தேதி தொடங்கி, மே  மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மே 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் 11-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இன்னும் 5 தினங்கள் இருக்கும் நிலையில், அங்குள்ள இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி பள்ளியில் தபால் ஓட்டுப்பதிவு தொடங்கியது. லோகித்பூரில் இருக்கும் விலங்குகள் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாதுகாப்புப் படை வீரர்கள், தங்களது தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி. சுதாகர் நடராஜன், தனது முதல் வாக்கைப் பதிவு செய்தார். இதன் மூலம் 2019 மக்களவைத் தேர்தலில் முதலில் ஓட்டுபோட்டவர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளார். தேர்தல் பணிகளில் ஈடுபடும் பாதுகாப்புப் படை வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் மூலமாக தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.

LOKSABHAELECTIONS2019, ITBP, FIRSTVOTE, SUDHAKARNATARAJAN, ARUNALCHALAPRADESH, CAST