நாடு முழுவதும் கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது செலுத்தப்படும்..? மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரவுள்ள தேதியை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்துடன் இணைந்து சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த சமீபத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.
முதற்கட்டமாக சுகாதாரத்துறையினருக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வரதன் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து 50 வயதுக்கு அதிகமானோருக்கும், 50 வயதுக்கு குறைந்த அதிக பாதிப்புடையவர்களுக்கு என சுமார் 27 கோடி பேருக்கு அடுத்த 6 மாதங்களில் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என ஹர்ஷ்வர்தன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாடு முழுவதும் வரும் ஜனவரி 13ம் தேதி கொரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். அதில் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்