‘தீடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘மும்பை மின்சார ரயிலில் மளமளவென பரவிய தீ’... வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் மின்சார ரயிலில் திடீரென தீப் பிடித்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தீடீரென கேட்ட பயங்கர சத்தம்’... ‘மும்பை மின்சார ரயிலில் மளமளவென பரவிய தீ’... வீடியோ!

மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில், சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்து, பன்வெல் நோக்கி உள்ளூர் மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வாஷி ரயில் நிலையம் அருகே வந்தபோது, பங்கர சத்தம் கேட்டது. பின்னர் ரயிலின் மேற்பகுதியில் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்தது. தீ மளமளவென பரவியதால் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். எனினும் சிறிதுநேரம் தீப் பற்றி எரிந்துகொண்டிருந்தது. இதனால் ரயில்நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குறைந்த மின்னழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரயிலின் மேற்பகுதியில் பை ஒன்றை தூக்கி எறிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயிலில் தீப் பிடித்ததும், உடனடியாக பயணிகள் இறக்கிவிடப்பட்டதால் அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. ரயில் நடுவழியில் நின்றதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சில மணி நேரம் தாமதமானது. பின்னர் தீப் பிடித்து எரிந்த அந்த ரயில், ரயில்வே பணிமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

ACCIDENT, MUBAI, ELETRICTRAIN