‘இதுவரை யார் கண்ணுலயும் தென்படல’.. 129 வருஷத்துக்கு அப்புறம் கண்டுபிடிக்கப்பட்ட ‘அரியவகை’ பாம்பு.. எங்கே தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > இந்தியாஅழிந்துவிட்டதாக கருதப்பட்ட அரியவகை பாம்பு ஒன்று 129 ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை பாம்பு இனத்தின் பெயர் Hebius pealii. உள்ளூர் வழக்கில் அஸ்ஸாம் கீல்பேக் என அழைக்கப்படுகிறது. விஷத்தன்மையற்ற இந்த பாம்பு 50 முதல் 60 செமீ நீளம் வரை வளரக்கூடியது. 1891ம் ஆண்டு பிரிட்டிஷ் தேயிலை தோட்டங்களை உருவாக்கிய சாமுவேல் எட்வார்ட் பேல் என்பவர் இந்த வகை பாம்பை முதன்முதலில் சிபிசாகர் மாவட்டத்திக் பார்த்தார்.
அந்த பாம்புகளை பிடித்து ஒன்றை கொல்கத்தாவில் உள்ள இந்த விலங்கியல் ஆய்வு நிறுவனத்துக்கும், மற்றொன்றை லண்டனில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்துக்கும் அனுப்பி வைத்தார். அதன்பிறகு இந்த வகை பாம்புகள் யார் கண்களிலும் தென்படவில்லை. அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டது. இந்த நிலையில் 129 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து 118 கிமீ தொலைவில், அஸ்ஸாம்-அருணாச்சலப் பிரதேச எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Lost and found: Snake species endemic to Assam rediscovered after 129 yearshttps://t.co/ze55StnlPc
The species ‘Hebius pealii’, called Assam Keelback, was first seen in 1891 when a British tea-planter Samuel Edward Peal collected two male specimens from Sibsagar district in As… pic.twitter.com/5RQ2IFoJoA
— Developer Gang (@DeveloperGang) June 29, 2020
இதுகுறித்து தெரிவித்த இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த தாஸ், ‘நாங்கள் அதிர்ஷ்டசாலி. அஸ்ஸாம் கீல்பேக் பாம்பை கண்டுபிடித்த பிறகு லண்டனில் உள்ள அதன் டிஎன்ஏ தகவலை பெற்று உறுதி செய்துகொண்டோம். லண்டனில் இந்த பாம்பின் உயிரியல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதால் எங்களால் இந்த பாம்பை எளிதில் கண்டறிய முடிந்தது. இந்த பகுதிகளில் இந்த பாம்பு இனங்கள் இருக்கிறதா என கண்டறிந்து பாதுகாக்கப்பட வேண்டும்’ என தெரிவித்தார்.
மற்ற செய்திகள்