2023 பட்ஜெட் : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆலோசனை
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பட்ஜெட்டுக்கான ஒதுக்கீடுகள், அறிவிப்புகள் குறித்து விவாதிக்க ஆலோசனை நிதி அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read | "எல்லா இடத்துலயும் அவரு இருக்காருங்க".. தோனி குறித்து கோலியின் வைரல் பதிவு!!
2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கும் நிலையில், இதில் முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரிதிநதிகளுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து பல்வேறு துறை பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசனை நடத்துவது நிதி அமைச்சரின் வழக்கம்.
அதன்படி, பட்ஜெட் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (நவம்பர் 21) முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை ஆலோசனை நடத்த உள்ளார். தொழில்துறை வல்லுநர்கள், வேளாண்துறை பிரதிநிதிகள், தொழிலாளர்கள் சங்க தலைவர்கள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. அதே போல, உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்தும் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அது மட்டுமில்லாமல், 28 ஆம் தேதி வரை பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடத்தவும் மத்திய நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மேலும் இதில் மத்திய பட்ஜெட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், அறிவிப்புகள் போன்றவற்றை விவாதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read | "கார், டிவி எதுவும் இப்ப வாங்காதீங்க".. அமேசான் நிறுவனர் ஜெப் அடித்த எச்சரிக்கை மணி?!.. பரபரப்பு பின்னணி ..
மற்ற செய்திகள்