இந்தியாவில் உறுதியானது ஐந்தாவது மரணம் ... அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் ... பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் எடுத்த முடிவு என்ன?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 63 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஏற்கனவே நான்கு பேர் கொரோனா தொற்று மூலம் உயிரிழந்திருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த 63 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது. இவருக்கு சர்க்கரை மற்றும் இருதய நோய் ஏற்கனவே இருந்ததாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் கொரோன வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் மார்ச் 31 ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
In order to contain the spread of #CoronaVirus, there will be complete lockdown in #Rajasthan from tomorrow, except for essential services, till 31st March. All offices – govt and private, malls, shops, factories will be closed & public transport services will be shut down too.
— Ashok Gehlot (@ashokgehlot51) March 21, 2020
Ordered statewide lock down till 31st March to check spread of #Covid19
All essential Govt services will continue & shops selling essential items such as milk, food items, medicines, etc will be open.
All DCs & SSPs have been directed to implement the restrictions immediately. pic.twitter.com/Wa2iqpDChY
— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 22, 2020