"என் அப்பாவுக்கு வேலை கெடச்சுருச்சு".. துள்ளிக் குதித்து கொண்டாடிய மகள்.. இணையத்தில் பரவும் நெகிழ்ச்சி வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்று சோஷியல் மீடியாவில் அதிக நேரம் உலவிடும் நம்மில் பலரும் நாளுக்கு நாள் வைரல் ஆவது தொடர்பாக ஏராளமான விஷயங்களை பார்த்திருப்போம்.
அது மட்டுமில்லாமல், இப்படி வைரல் ஆகும் விஷயங்கள், அதிர்ச்சிகரமாகவும், வினோதமாகவும், மனதை நெகிழ வைக்கக் கூடிய வகையிலும் என வித விதமாக இருப்பதை நாம் பார்த்திருப்போம்.
அப்படி சில வீடியோக்கள், மனதுக்கு மிகவும் நெருக்கமான வகையிலும் இருக்கக் கூடிய பட்சத்தில் ஒருவித தாக்கத்தை கூட நம்மில் ஏற்படுத்தும்.
அந்த வகையில் ஒரு வீடியோ தான் சமீப தினங்களாக இணையத்தில் பலரது இதயத்தையும் வென்று வருகிறது. இன்றைய காலகட்டத்தில், பெரு நகரங்களில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் என்பது அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் உணவு டெலிவரி ஊழியர்கள் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
அப்படி ஒரு சூழ்நிலையில், நபர் ஒருவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைக்கு சேர, அதை அவரது மகள் கொண்டாடும் விதம் தான், இணைவாசிகள் பலரையும் கலங்கவும் கொண்டாடவும் வைத்துள்ளது. இது தொடர்பாக பகிரப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், சிறுமி ஒருவர் பள்ளிச் சீருடையில் கண்ணை மூடிக் கொண்டு நிற்கிறார்.
அவர் கண்ணைத் திறக்கும் போது, முன்பு அவரின் தந்தை ஸ்விகி டெலிவரி உணவு நிறுவனத்தின் சீருடையை கையில் வைத்துக் கொண்டு நிற்க, அவருக்கு வேலை கிடைத்ததை எண்ணி கட்டித் தழுவி துள்ளிக் குதிக்கிறார் மகள். தந்தைக்கு வேலை கிடைத்ததால் அதனை இப்படி உற்சாகமாக கொண்டாடும் மகளின் வீடியோ, பலரது இதயத்தையும் வென்றுள்ளது.
கடந்த சில தினங்களாக இந்த வீடியோ இணையத்தில் ஹிட்டடித்து வரும் நிலையில், தற்போது ஸ்விகி நிறுவனமும் இந்த வீடியோவில் கமெண்ட் ஒன்றை செய்துள்ளது. உணவு டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்து வருவது குறித்து பல வித கருத்துக்களை பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில், மகளின் இந்த சந்தோசத்திற்கு முன் அனைத்தும் சுக்கு நூறாகி போய் விட்டது என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்