மகளுடைய டான்ஸ்.. கீழே இருந்தே மூவ்மெண்ட் கொடுத்த அப்பா.. மொத்த கூட்டமும் இவங்களைத்தான் பார்த்திருக்கு.. கியூட் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு பள்ளியில் நடைபெற்ற நடனப் போட்டியில் தனது மகள் நடனமாட கீழிருந்தபடியே தந்தையும் சேர்ந்து ஆடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மகளுடைய டான்ஸ்.. கீழே இருந்தே மூவ்மெண்ட் கொடுத்த அப்பா.. மொத்த கூட்டமும் இவங்களைத்தான் பார்த்திருக்கு.. கியூட் வீடியோ..!

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | கலங்கிப்போன மக்கள்..! இனி வரப்போற நாட்கள் ரொம்ப முக்கியம்.. துருக்கிக்கு ஐநா கொடுத்த அலெர்ட்..

இணையதளங்களில் எப்போதும் மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எளிதில் பலரையும் சென்றடைந்து விடும். குறிப்பாக சமூக வலை தளங்களின் வளர்ச்சி அதிகரித்த நிலையில் உறவுகளுக்கு இடையேயான அன்பை பிரதானப்படுத்தும் கருத்துக்கள் மற்றும் வீடியோக்கள் பல கோடி மக்களை கவர்ந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது தனது மகளுடைய நடனத்தை ஆர்வத்துடன் பார்க்கும் தந்தை பின்னர் தானும் சேர்ந்து ஆடும் வீடியோ ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு பள்ளியில் ஆண்டு விழா நடைபெறுவதாக தெரிகிறது. அப்போது அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் சிலர் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடனம் ஆடுகின்றனர். இதனை அவர்களது பெற்றோர் கீழே இருந்தபடி ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர், அப்போது புகழ்பெற்ற பாடகர் டாலர் மெஹந்தியின் டுனக் டுனக் பாடலுக்கு சிறுமிகள் சேர்ந்து நடனம் ஆடுகின்றனர். அந்த சூழ்நிலையில் மேடையில் நடனமாடும் சிறுமியின் தந்தை ஒருவர் கீழே இருந்தபடி அதனை ஆர்வத்துடன் பார்க்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

பின்னர் தனது மகளைப் போலவே கீழே இருந்தபடியே அவர் நடனமாடுகிறார். தந்தையும் மகளும் ஒரே போல நடனமாடுவதை அங்கிருந்த பலர் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரியான தீபன்ஷு கப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில் இந்த வருடத்திற்கான சிறந்த தந்தை விருது இவருக்கு தான் கொடுக்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

24 வினாடிகள் நீளும் இந்த வீடியோ இதுவரையில் 1.42 லட்சம் முறை பார்க்கப்பட்டிருக்கிறது. 6000க்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்திருக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ "இந்த வீடியோவை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது அப்பாவுடைய அர்ப்பணிப்பு என்ன என்பது இதில் விளங்குகிறது" என்றும் மற்றொருவர் "குழந்தைகளின் வளர்ச்சிக்கு தந்தையர் என்றுமே துணை நிற்பது உண்டு" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also Read | "சிறிய வாய்ப்பும் மாற்றத்தை நிகழ்த்தும்".. நரிக்குறவர் சமுதாய பெண்களின் மகத்தான முயற்சி.. அமைச்சர் உதயநிதி நெகிழ்ச்சி..!

FATHER, DAUGHTER, DANCE, SCHOOL

மற்ற செய்திகள்