‘செங்கோட்டையில் பறந்த விவசாயிகள் கொடி’!.. தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்த டிராக்டர் பேரணி.. உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் டெல்லி செங்கோட்டையில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

‘செங்கோட்டையில் பறந்த விவசாயிகள் கொடி’!.. தடையை மீறி டெல்லிக்குள் நுழைந்த டிராக்டர் பேரணி.. உச்சக்கட்ட பரபரப்பில் தலைநகர்..!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை நடந்த 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் குடியரசு தினத்தன்று லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் டெல்லி காவல்துறை சார்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் குடியரசு தினவிழாவுக்கு இடையூறு ஏற்படாமல் பேரணி நடத்துவதற்கு விவசாயிகள் ஒப்புக்கொண்டதையடுத்து பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதனால் இன்று காலை முதலே விவசாயிகள் போராட்டக்களத்திலிருந்து டெல்லிக்குள் டிராக்டர் மூலம் நுழையத் தொடங்கினர். லட்சக்கணக்கான விவசாயிகள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்திக்கொண்டு டிராக்டர்களில் வந்தனர். அப்போது விவசாயிகளைத் தடுப்பதற்காக காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். மேலும் தடுப்புகளை மீறி செல்ல முயன்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தடுப்புகளை அடித்து உடைத்தனர். டெல்லி எல்லைப் பகுதி வன்முறைக் களமானது. மேலும் செங்கோட்டையின் கோபுரத்தில் உள்ள ஒரு பகுதியில் விவசாயிகள் தங்களது கொடியை ஏற்றினர். குடியரசு தினத்தன்று தலைகரில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்