Kadaisi Vivasayi Others

என்ன நம்ம பேங்க் அக்கவுண்ட்ல ரூ.15 லட்சம் வந்திருக்கு.. சந்தோஷத்தில் புது வீடு கட்டிய விவசாயி.. 6 மாசம் கழிச்சு வந்த அதிர்ச்சி தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வங்கி கணக்கில் தவறுதாக வந்த 15 லட்ச ரூபாயில் ஒருவர் வீடு கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நம்ம பேங்க் அக்கவுண்ட்ல ரூ.15 லட்சம் வந்திருக்கு.. சந்தோஷத்தில் புது வீடு கட்டிய விவசாயி.. 6 மாசம் கழிச்சு வந்த அதிர்ச்சி தகவல்..!

எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவை சேர்ந்தவர் ஞானேஸ்வர் ஓட். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள வங்கியில் ஜன் தன் (Jan Dhan) கணக்கு வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி இவரது வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் ஆகியுள்ளது.

இதனைப் பார்த்த ஞானேஸ்வர் ஓட் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளார். இதனை அடுத்து தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளார். இதன்பின் தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.

Farmer gets Rs15 lakh in bank account, builds house in Maharashtra

அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்துக்கு வளர்ச்சி பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக ஞானேஸ்வர் ஓட்டின் வங்கிக் கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளது. 6 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகிகள், வங்கியை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

அப்போதுதான், ஞானேஸ்வர் ஓட்டின் வங்கிக்கணக்கில் தவறுதலாக பணம் டெபாசிட் ஆனது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து வங்கி அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வர் ஓட்டுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும் அவரது வங்கிக்கணக்கில் மீதமிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்து கொண்டது. ஆனால் வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ.9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வர் ஓட் செய்வதறியாது முழித்துக்கொண்டுள்ளார். வங்கியில் தவறுதலாக டெபாசிட் ஆன பணத்தில் விவசாயி ஒருவர் வீடு கட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடேங்கப்பா..! ரூ.1 கோடி செலவில் தீவுக்கு ‘டூர்’ கூட்டிட்டு போகும் நிறுவனம்.. உச்சக்கட்ட உற்சாகத்தில் ஊழியர்கள்..!

FARMER, BANK ACCOUNT, BUILDS HOUSE, MAHARASHTRA, விவசாயி

மற்ற செய்திகள்