'வருவாய் குறைவு'...'ரயில்வே கட்டணம் எவ்வளவு உயர போகுது'?...அதிர்ச்சியில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபயணிகள் மற்றும் சரக்கு ரயில்வே கட்டணங்கள் விரைவில் உயர வாய்ப்புள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் சூசகமாக தெரிவித்துள்ளார்.
பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் சீரமைக்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரயில்வே கட்டணங்கள் உயரலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்டண உயர்வு 20 சதவீதம் வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே.யாதவ், இந்த நிதி ஆண்டின் 2-வது காலாண்டில், பயணிகள் கட்டணம் 155 கோடியும், சரக்கு கட்டணம் 3 ஆயிரத்து 901 கோடியும் வருவாய் குறைந்திருப்பதாக கூறினார். எனவே, வருமானம் ஈட்டும் நோக்கில், பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த கட்டண உயர்வு மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்யப்பட கூடிய ஒன்று என தெரிவித்தார்.
மேலும் கட்டண உயர்வு நீண்ட ஆலோசனைக்கு பிறகுதான் முடிவு செய்ய முடியும் என்றும் குறிப்பிட்ட அவர், சாலை வழியான சரக்கு போக்குவரத்தை ரயில்வேயை நோக்கி ஈர்க்கச் செய்ய வேண்டும் என்பதே தங்களது இலக்கு என வாரிய தலைவர் வி.கே.யாதவ் விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே ரயில் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் இந்த திட்டத்தால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.