My India Party

எங்களுக்கு ‘மொய் பணம்’ வேண்டாம்.. மண்டபத்தில் ஒரு ‘பெட்டி’ வைத்த கல்யாண வீட்டார்.. குவியும் பாராட்டு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமண விழா ஒன்றில் மொய் பணம் மற்றும் பரிசு பொருட்களை விவசாயிகளுக்கு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு ‘மொய் பணம்’ வேண்டாம்.. மண்டபத்தில் ஒரு ‘பெட்டி’ வைத்த கல்யாண வீட்டார்.. குவியும் பாராட்டு..!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

Family says no to wedding gifts, Keeps donation box for farmers

இந்த நிலையில் பஞ்சாபில் நடந்த ஒரு கல்யாண விழாவில் மொய்ப்பணம் வசூலிப்பதற்கு பதிலாக, அந்த பணத்தை விவாசாயிகளுக்கு வழங்குமாறு திருமண வீட்டார் கூறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் உள்ள முக்த்சர் என்ற இடத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றது. அப்போது திருமண வீட்டார், ‘எங்களுக்கு மொய்பணம் வேண்டாம், பரிசு பொருட்களும் தர வேண்டாம். அந்த பணத்தை டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வழங்குங்கள்’ என மணமக்களை வாழ்த்த வரும் உறவினர்கள், நண்பர்களிடம் திருமண வீட்டார் கூறியுள்ளனர்.

Family says no to wedding gifts, Keeps donation box for farmers

அதற்காக திருமண மண்டபத்தில், ‘விவசாயிகளுக்கு உதவுங்கள்’ என குறிப்பிட்டு தனியாக ஒரு பெட்டி, பணம் போடுவதற்காக வைக்கப்பட்டது. திருமணத்துக்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் அந்த பெட்டியில் பணத்தை போட்டு விட்டு சென்றனர். திருமண வீட்டாரின் இந்த செயலுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மற்ற செய்திகள்