Viruman Mobiile Logo top
Kaateri Mobile Logo Top

ஒரிஜினல் போலீஸ்கிட்டயே அபராதம்.. ஆள் தெரியாம காசு கேட்ட போலி போலீஸ்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்டே..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உண்மையான அதிகாரிகளிடம் பணம் பறிக்க ஈடுபட முயன்ற போலி போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் அசாம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒரிஜினல் போலீஸ்கிட்டயே அபராதம்.. ஆள் தெரியாம காசு கேட்ட போலி போலீஸ்.. அடுத்து நடந்தது தான் ஹைலைட்டே..!

Also Read | 18 வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவர்.. லேடி கெட்டப்பில் வந்து சொன்ன விஷயம்.. நம்பிய மக்களுக்கு காத்திருந்த ஷாக்.!

அசாம் மாநிலத்தின் தேஜ்பூரில் உள்ள பருவா சாரியாலி என்ற இடத்தில் வாகன ஓட்டிகளிடையே விதிமீறல் செய்பவர்களிடம் போலி போலீஸ் அதிகாரி ஒருவர் அபராதம் விதித்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்திருக்கின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன

அபராதம்

விதிமீறலில் ஈடுபட்டதாக வாகன ஓட்டிகளிடம் அபராத தொகையினை கேட்டிருக்கிறார் அந்த போலி போக்குவரத்து அதிகாரி. அப்போது, அவருடைய வாகனத்தை கண்ட பயணிகள் சிலர் சந்தேகம் அடைந்திருக்கின்றனர். உடனடியாக அருகில் இருந்த போக்குவரத்து அதிகாரிகளிடத்தில் இதுபற்றி கூறியுள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபரை அதிகாரிகள் கண்காணித்திருக்கிறார்கள். அவர்மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்படவே,  அவரை பற்றி மேலதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும், மஃப்டியில் இருந்த போலீஸ் அதிகாரிக்கும் அவர் அபராதம் விதிக்க முயன்றதாக தெரிகிறது. இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உயர் போக்குவரத்து துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்திருக்கின்றனர்.

Fake traffic police officer nabbed while fine on police

இதற்கு முன்பே

கைது செய்யப்பட்டவரிடத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அசாம் மாநிலத்தின் ரங்கியா மற்றும் நாகோன் ஆகிய பகுதிகளிலும் அவர் இதே போன்று வேடமணிந்து மக்களிடம் இருந்து பணத்தை பெற்றது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூத்த காவல்துறை அதிகாரி,"கைது செய்யப்பட்டவர் சிறுவயதில் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால், அவருக்கு போதிய கல்வி தகுதி இல்லாததால் காவல்துறையினர் போன்று வேடமணிந்து இந்த குற்றச் செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்" என்றார்.

அசாம் மாநிலத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி போல வேடமணிந்து விதி மீறலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | "வீடோட மொத்த தீவும் விற்பனைக்கு".. நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு.. விலையை கேட்டுட்டு குஷியான மக்கள்..!

POLICE, FAKE TRAFFIC POLICE, FINE, போலீஸ், அபராதம்

மற்ற செய்திகள்