'இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த’... ‘இந்த தடுப்பூசிகள் நல்ல பலன் கொடுக்கும்’... ‘விஞ்ஞானிகள் சொல்லும் காரணம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது என்பது குறித்து விஞ்ஞானிகள் மற்றும் நோய் எதிர்ப்பு நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகளவில் இன்றளவும் முடியாமல், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன.
அதன்படி, கொரோனாவை தடுப்பதில், அமெரிக்காவின் ஃபைசர் தடுப்பூசி 90 சதவீதம், மாடர்னா தடுப்பூசி 94.5 சதவீதம், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 92 சதவீதம் செயல்திறனை கொண்டவையாக செயல்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தருணத்தில் கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பூசிகளில் இந்தியாவுக்கு ஏற்றது எது என்பது குறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது, தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான வெப்பநிலையை கருத்தில் கொண்டு, ‘புரோட்டீன் அடிப்படையிலான தடுப்பூசியே நமது நாட்டுக்கு சிறப்பாக செயல்படும்’ என அவர்கள் கூறி உள்ளனர். அந்த வகையில் இந்திய வெப்ப நிலைக்கு ஏற்றது, அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி என அவர்கள் கருதுகின்றனர்.
இந்த தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கு மிக குறைந்த வெப்ப நிலை தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்த நிலையில், அமெரிக்காவின் நோவாவேக்ஸ் தடுப்பூசியும் இந்தியாவுக்கு ஏற்றதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நோய் எதிர்ப்பு நிபுணரான டெல்லியைச் சேர்ந்த தேசிய நோயெதிர்ப்பு கல்வி நிறுவனத்தின் சத்யஜித் ராத் கூறுகையில், ‘அமெரிக்காவின் ஃபைசர்-பயோ என்டெக் நிறுவனம் மற்றும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பு மருந்துகள் குறைந்த வெப்பநிலையில் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஆனால், நோவாவேக்ஸ் போன்ற புரோட்டீன் அடிப்படையிலான தடுப்பூசிகளுக்கு குறைந்த வெப்பநிலை தேவைப்படாது. மேலும், மருத்துவரீதியிலும் நோவாவேக்ஸ், சநோஃபி போன்ற புரோட்டீன் தடுப்பு மருந்துகள் நல்ல பனலன் அளிக்கும் என்பதால் மத்திய அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார். இருப்பினும் தடுப்பூசியின் பாதுகாப்பு, விலை, சேமிப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மற்ற செய்திகள்