இந்த 'ஏரியா'ல ஊரடங்க ஸ்டாப் பண்ணலாம் ... 'ஆட்டோக்கு' மட்டும் 'பெர்மிஷன்' ... ஐடியா சொல்லும் நிபுணர்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவு இன்னும் நான்கு நாட்களுக்குள் முடிவடைய உள்ளது. ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தேவையில்லாமல் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தும் வருகின்றனர்.

இந்த 'ஏரியா'ல ஊரடங்க ஸ்டாப் பண்ணலாம் ... 'ஆட்டோக்கு' மட்டும் 'பெர்மிஷன்' ... ஐடியா சொல்லும் நிபுணர்கள்!

இப்படி பல கட்டுப்பாடுகள் இருந்த போதும் கொரோனா வைரசின் தீவிரம் குறைந்த பாடில்லை. பல மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக ஒடிசா அரசு ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. வைரஸ் கட்டிற்குள் வராததால் பிரதமர் மோடியும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கை எப்படி படிப்படியாக தளர்த்தலாம் என்பது குறித்து நிபுணர்கள் சில ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர். பேருந்துகள் முதல் கால் டாக்சி, ஆட்டோ போன்ற சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆட்டோ மீதான தடையை மட்டும் ஏப்ரல் 30 வரை தளர்த்தலாம். அதே போல பொருட்களின் போக்குவரத்தை அனுமதிக்கலாம். மே மாதம் இறுதி வரை கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகளை ஊக்குவிக்க திட்டங்களை வகுக்கலாம். ஆடைகள், கட்டுமான பணிகள் உட்பட அனைத்து தொழில்களிலும் குறைந்த வேலையாட்களை கொண்டு செயல்பட அனுமதிக்கலாம். குறைந்த பாதிப்புள்ள மாவட்டங்களை ஊரடங்கிலிருந்து தளர்த்தலாம் என சில முக்கிய ஆலோசனைகளை அளித்துள்ளனர்.

நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ள நிலையில் ஊரடங்கு நீடிப்பது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.