"லாலிபாப் குடுத்து சமாதானம் பண்ணிடுவீங்களா..?".. சுகாதரமற்ற பள்ளி கழிவறை .. நீதிபதிகள் அதிரடி உத்தரவு.!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளின் நிலை குறித்து சமர்ப்பிக்க அறிக்கையை சுட்டிக்காட்டி மஹாராஷ்டிரா மாநில உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
மனுத்தாக்கல்
மத்திய மற்றும் மாநில அரசு பள்ளிகளில் உள்ள கழிவறைகளில் பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார வசதிகள் இல்லாதது குறித்து சட்ட கல்லூரி மாணவிகள் நிகிதா கோர் மற்றும் வைஷ்ணவி கோலவே ஆகியோர் மஹாராஷ்டிரா மாநில உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். மேலும், அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கான கழிப்பறைகள் சுகாதாரமானதாக இல்லை எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் உள்ள ஏழு மாவட்டங்களில் உள்ள 16 நகரங்களை சேர்ந்த பள்ளிகளில் கோர் ஆய்வு நடத்தியுள்ளார். இதுகுறித்த விரிவான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
நாங்க குழந்தைகளா?
இதனை தொடர்ந்து மாணவிகள் தாக்கல் செய்திருந்த மனு, தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம் எஸ் கர்னிக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏழு பள்ளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் காட்டுவதற்கான ஆவணத்தை பெஞ்சில் சமர்ப்பித்ததாகவும் கூடுதல் அரசு வழக்கறிஞர் பூபேஷ் சமந்த் தெரிவித்தார்.
இதனையடுத்து இதுகுறித்து பேசிய நீதிபதிகள்,"நிர்வாக அதிகாரிகள் நீதிபதிகளை குழந்தைகள் என நினைக்கிறார்களா? லாலிபாப் கொடுத்து எங்களை சமாதானம் செய்துவிடலாம் எனக் கருதுகிறீர்களா? இப்போது உடனடியாக பள்ளிகளில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்பட்டு அதற்கான அறிக்கை தாக்கல் செய்யப்படும். ஆனால், அடுத்த மாதமே பழைய நிலைக்கு கழிவறைகள் சென்றுவிடும்" எனக் கூறியதாக தெரிகிறது.
ஆய்வு
இதனை தொடர்ந்து அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து பேசிய நீதிபதிகள்,"ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள குறிப்பிட்ட 15 பள்ளிகளை மகாராஷ்டிரா மாவட்ட சட்ட சேவைகள் ஆணைய அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து எங்களுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்" என்றனர்.
மற்ற செய்திகள்