ET Others

ஷேர் மார்க்கெட் முறைகேடு வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் கைது.. சிபிஐ சொன்ன முக்கிய தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் தர டெல்லி நீதிமன்றம் மறுத்த நிலையில் நேற்று சிபிஐ அவரை டெல்லியில் வைத்து கைது செய்தது. இந்நிலையில் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஷேர் மார்க்கெட் முறைகேடு வழக்கு.. சித்ரா ராமகிருஷ்ணன் கைது.. சிபிஐ சொன்ன முக்கிய தகவல்..!

ரொம்ப நேரம் வெய்ட் பண்ண மாற்றுத் திறனாளி ரசிகர்.. வேகமா வந்த கோலி கொடுத்த அசத்தல் கிஃப்ட்.. வைரல் வீடியோ..!

சித்ரா ராமகிருஷ்ணனை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. ஆனால், 7 நாட்கள் விசாரணைக்கு ஒப்புதல் அளித்து இருக்கிறது நீதிமன்றம். 

2003 - 2006 ஆம் ஆண்டில் தேசிய பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த போது, ஆனந்த் சுப்ரணியன் என்பவருக்கு விதிமுறைகளை மீறி பதவி வழங்கியது உள்ளிட்ட பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக சித்ரா ராம கிருஷ்ணன் மீது குற்றம் சாட்டியது இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி.

அதுமட்டும் அல்லாமல் இமயமலையில் உள்ள சாமியார் ஒருவரின் முடிவுகளுக்கு ஏற்ப தேசிய பங்குச் சந்தையில் நடவடிக்கைள் எடுக்கப்பட்டதாகவும் பங்குச் சந்தை குறித்த ரகசிய தகவல்களை அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் சித்ரா ராம கிருஷ்ணன் ஏதும் கூறவில்லை என சிபிஐ தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இந்த வழக்கில் கடந்த மாதம் கைதான ஆனந்த் சுப்ரமணியனிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

Ex NSE Head Confronted With Himalayan Yogi, Refused To Recognize

கசிந்த தகவல்கள்

சிபிஐ விசாரணையில் சித்ரா ராமகிருஷ்ணனின் தனிப்பட்ட மின்னஞ்சலில் இருந்து ஆனந்த் சுப்ரமணியனின் மின்னஞ்சலுக்கு பங்குச் சந்தை குறித்துப் பல முக்கியத் தரவுகளைப் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிகிறது.

உலகளவில் மிகப்பெரிய பங்குச் சந்தையாக கருதப்படும் தேசிய பங்குச் சந்தையில் குளறுபடிகள் ஏற்ட்டுள்ளதாக செபி குற்றம் சாட்டிய நிலையில் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணன் கைதாகி இருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அகதி முகாமுக்குள் கேட்ட ஹேப்பி பர்த்டே பாடல்.. மகிழ்ச்சியில் திகைத்துப்போன 7 வயது சிறுமி.. வைரல் வீடியோ..!

NSE, HIMALAYAN YOGI, CBI, ஷேர் மார்க்கெட், சிபிஐ, இந்திய தேசிய பங்குச் சந்தை

மற்ற செய்திகள்