'அடுத்தடுத்து மயங்கி விழுந்த 350 பேர்!'.. ஆந்திராவில் பரவும் மர்ம நோய்! ஒருவர் பலியானதாக தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு நகரில் அடுத்தடுத்து 300க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததை அடுத்து சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

'அடுத்தடுத்து மயங்கி விழுந்த 350 பேர்!'.. ஆந்திராவில் பரவும் மர்ம நோய்! ஒருவர் பலியானதாக தகவல்!

இவர்கள் பெரும்பாலும் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை எனும் சூழலில், இவர்கள் மயங்கி விழுந்து எபிலெப்சி நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே சிலபேருக்கு உடல்நிலை சீராகி வீடு திரும்பியுள்ள நிலையில்,  பலரும் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மருத்துவக் குழுவினர், பாதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்து வருவதுடன் அவர்களின் ரத்த மாதிரிகளை பெற்று சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

epilepsy , Headache Eluru andhra people admitted in hospital

ஒருவர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேரடியாக தகவல்களை கேட்டறிந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்