பெரிய சைஸ்ல 'பார்சல்' ஒண்ணு வந்திருக்கு மேடம்...! ஒருவேளை 'அதுவா' இருக்குமோ...? - நம்பிய பெண்மணிக்கு ஃபேஸ்புக் நண்பன் வைத்த ஆப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇங்கிலாந்தை சேர்ந்த நபர் இந்திய பெண்ணுடன் முகநூல் மூலம் நட்பு கொண்டு கோடிக்கணக்கில் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவைச் சேர்ந்த 55 வயதுடைய பெண் முகநூல் மூலம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவடன் நட்பாகி உள்ளார். அதன்பின் நாளடைவில் அப்பெண்மணியும், வெளிநாட்டு இளைஞரும் நெருங்கிய நண்பர்களாக மாறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியாவை சேர்ந்த அந்த பெண்மணிக்கு பிறந்தநாள் வந்துள்ளது. அதன்காரணமாக இங்கிலாந்து நண்பர் பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த செல்போன் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்பின் சில நாள் கழித்து அப்பெண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்ததில், அவருடன் பேசிய நபர் டெல்லி சுங்கவரித்துறையில் இருந்து பேசுவதாகவும், பெரிய பார்சல் ஒன்று வந்திருப்பதாகவும், இதில் விலையுயர்ந்த பரிசு பொருட்கள் இருப்பதால் சேவை கட்டணமாக பணத்தை அனுப்பி வைக்கும்படி தெரிவித்து உள்ளார்.
இதனை நம்பிய பெண்மணி, சுங்கத்துறை அதிகாரி என அறிமுகப்படுத்திகொண்ட நபரின் வங்கி கணக்கில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.3 கோடியே 98 லட்சம் அனுப்பி உள்ளார்.
ஆனால் இதுவரை நாள் வரை எந்த பார்சலும் வரவில்லை, அதோடு கொடுத்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. அதன் பின்னரே தான் ஏமார்ந்து உள்ளதை உறுதி செய்து கொண்டு போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்