'நீங்க இப்படி செய்யவா என் பொண்ண காலேஜ்க்கு அனுப்புனேன்'... 'கதறி துடித்த பெற்றோர்'... காதலனும், முன்னாள் காதலனும் செய்த வெறிச் செயல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

காதலை முறித்து கொண்டதால், என்ஜினீயரிங் மாணவிவிக்கு நடந்த கொடூர சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

'நீங்க இப்படி செய்யவா என் பொண்ண காலேஜ்க்கு அனுப்புனேன்'... 'கதறி துடித்த பெற்றோர்'... காதலனும், முன்னாள் காதலனும் செய்த வெறிச் செயல்!

பெங்களூரு சோழதேவனஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் பவித். 22 வயது இளைஞரான இவர், கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். அப்போது தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படிக்கும் சிக்கபானவாராவை சேர்ந்த மோனிகா என்ற பெண்ணுடன் பவித்துக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் 4 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள். இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திடீரென பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பவித்துடன் இருந்த காதலை மோனிகா முறித்து கொண்டார். பின்னர் மோனிகாவை அவர் தொடர்பு கொள்ள முயற்சித்தும், அவர் பவித்துடன் பேச மறுத்துவிட்டார். இந்த சூழ்நிலையில் சோழதேவனஹள்ளியை சேர்ந்த மாணவரான ராகுலுடன் மோனிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இது குறித்து அறிந்த பவித் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதனிடையே கடந்த  7-ந் தேதி ராகுலின் வீட்டுக்கு மாணவி மோனிகா சென்றிருந்தார்.

இதுகுறித்து அறிந்த பவித், ராகுலின் வீட்டிற்கு சென்று மோனிகாவுடன் சண்டை போட்டுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராகுல், ஏன் பவித் குறித்து ஏன் என்னிடம் கூறவில்லை என மோனிகாவை தாக்கியுள்ளார். கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராகுல் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மோனிகாவை தன்னுடைய வீட்டுக்கு பவித் அழைத்து வந்தார். அங்கு வந்ததும் இருவருக்கும் மீண்டும் கடும் சண்டை ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரத்தில் இருந்த பவித், ஹெல்மெட்டால் மோனிகாவை கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த மோனிகா, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சூழ்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் மோனிகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சம்பவம் குறித்து அறிந்த போலீசார், ராகுல், பவித்தை கைது செய்தனர். 

இந்த நிலையில், மாணவி மோனிகாவை ராகுல், பவித் கொடூரமாக தாக்கியதால் தான், அவர் உயிர் இழந்திருப்பதாகவும், அதனால் ராகுல், பவித் மீது சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் துணை போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்துள்ளார். இதற்கிடையே மோனிகாவின் உடலை பார்த்து கதறி அழுத அவரது பெற்றோர், இந்த கோலத்தில் பார்க்கவா உன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தேன் என கதறினார்கள்.

மேலும் பவித் மோனிகாவின் தலையில் ஹெல்மெட்டால் தாக்கிவிட்டு, அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கூறி எங்களிடமே பவித் நல்லவன் வேஷம் போட்டதாக மோனிகாவின் பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளார்கள். என்ஜினீயரிங் மாணவி கொடூரமாக கொல்லபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்